Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பிணி உயிரிழப்பு! மகளிர் தினம் என்பது நாளில் மட்டும்தான் இருக்கிறதா?

மகளிர் மட்டும் படம் ஹிட்டானால் மட்டும் போதுமா? எப்போது இந்த சமூகம் பெண்களுக்கு மரியாதை தர போகிறது தெரியவில்லை. மாதவிடாயில் தொடங்கி கிடைக்கும் மறு வாழ்வு வரை பெண் சந்திக்கும் பிரச்சனைகள் எவ்வளவு என்பதை விரல்களால் எண்ண இயலாது. அப்படி இருக்க நேற்று திருச்சியில் நடந்த வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாகனத்தை எட்டி உதைத்த போலீசால் கர்ப்பிணி பலியான சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற நபர் எந்த அளவு வேதனையை சந்திந்து இருப்பார் என்பதை புரிந்துக்கொள்ளாத ஒருவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இதே நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பார் என மக்கள் கடும் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

மகளிருக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கினாலும் அதற்கு பின்னால் இருக்கும் அவலம் என்பது சொல்லி புரியவைக்கும் ஒன்றல்ல. திரைப்பட துறையில் தொடங்கி எல்லா துறையிலும் பெண்களின் பங்கு என்பது இன்ப துன்பத்தில் அதிகமாகவே இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல், குழந்தை கற்பழிப்பு, பெண் சிசு படுகொலை, வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என அவர்கள் அன்றாட நாளில் சந்திக்கும் பிரச்சனை எண்ணற்றவை.

படுக்கை அறையில் காணும் சுகம் மட்டுமே வாழ்வல்ல என துடிக்கும் பெண்கள் எத்தனையோ பேர். தன் கணவனுக்கு பிடிக்காது எனும் ஒரே காரணத்திற்காக தன் திறமையை மறைத்து முந்தானை விரிக்கும் பெண்கள் எத்தனையோ பேர். பெண் என்பவள் தன் ஆசையை கூறினால் அதற்கு விலைப் பேசும் சமூகம் இது. அப்படி இருக்க விலை மாதுக்கள் தன் திறமையை மறந்து அரை ஜான் வயிற்றை நிரப்ப ஆசை தூண்டில் போட துணிந்துவிட்டனர். இந்த நிலைக்கு அவர்களை தள்ளியது யார்?

திருநங்கை பெண்கள் தன் அன்றாட பசியை போக்க என்ன செய்கிறோம் என்பதை மறந்து செய்ய தொடங்கிவிட்டனர். அவர்கள் சாலையில் வரும்போது அருவருப்பாக நாம் பார்க்கிறோம். அவர்கள் செய்யும் செயலை இழிவாக பார்க்கிறோம். ஆனால், இந்த நிலைக்கு அவர்களை தள்ளி இன்று அறுவை சிகிச்சை தான் தீர்வு என தந்தது யார்?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். அது காதலி என நினைக்கும் வரை இந்த சமூகம் மாற வாய்ப்பில்லை. ஏன் அது தாயாக இருக்கக்கூடாது? அந்த வெற்றியை ருசித்தவர் ஏன் குழந்தைகளின் தந்தை அல்லது மகன்களாக இருக்கக்கூடாது. இது புரியாதவரை காதலி மேல் அமிலம் அடிக்க தோன்றும் எண்ணம் என்பது மறைய போவதில்லை. 

பெண்கள் போல் அன்பை காட்ட யாராலும் இயலாது. அதேபோல் ஆண்கள் பொய் பாசம் காட்டினாலோ அல்லது அவர்கள் மேல் சந்தேகம் வந்தாலோ பெண் என்பவள் கண்டிப்பாக அதன் பிறகு விலகி செல்ல தான் பார்ப்பாள். 

அதே பெண்ணுக்கு திருமணம் ஆன பிறகும் அடையும் வேதனை என்பது பல. குழந்தையை வளர்ப்பது, மற்றவர்கள் புரளி பேச அதற்கு சிரித்து கொண்டு நகர்வது, தன் மகன்/மகள் காதலித்து தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டால் அதை ஊர் உலகத்திடமிருந்து எப்படி சமாளிப்பது என தெரியாமல் தவிப்பது... அதை சமாளித்து பெருமூச்சு விடுவது இப்படி பெண்களின் பங்கு என்பதை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒரே மாதிரி வேலையை செய்யும் நமக்கே சலிப்பு என்பது மனதில் தட்டினால், தினம் தினம் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அன்றாட குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் தரும் பெண் என்பவள் எப்படிப்பட்டவள்.

பாவம், அந்த கர்ப்பிணி பெண்ணின் ஆசை விண்ணுலகில் தான் நிறைவேற்றப்பட வேண்டுமென இருந்திருக்கிறது. எவ்வளவு ஆசைகளுடம் அப்பெண் ஒவ்வொரு நாளும் இருந்திருப்பாள். அந்த மாங்கல்யத்தை பெற்றுக்கொண்ட கணவரின் கண்ணீர் பதிவு எவ்வளவு கொடுமையானது என்பதை மேலே உள்ள புகைப்படமே சொல்லும்.

அவளுடைய ஆத்மா அக்கருவில் வளர்ந்த குழந்தையுடன் சாந்தி அடையட்டும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon