Link copied!
Sign in / Sign up
4
Shares

கர்ப்பிணி பெண்களே! கருவை காதலிக்க நீங்கள் தயாரா…?

இல்லத்தரசியின் வாழ்வை மேலும் இனிமையாக்குவது அவர்களுடைய கர்ப்ப காலமே என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்னும் செய்தியை தெரிந்து கொள்ளும் அவள் மனதானது, சிறகில்லா தேவதையாக வானில் பறக்க ஒருபோதும் தவறுவதில்லை; அதனை அவள் அடக்கி வைத்திருக்கும் சுய ஆசைகள் அனைத்தையும் மறந்து., கருவில் வளர போகும் குழந்தை மீது காட்டும் அக்கறையே அவ்வளவு அழகாக உணர்த்தும்.

அப்படி இருக்க, அவள் இதுவரை காணாத குணத்தையும் பல சமயங்களில் கொள்ள மறப்பதில்லை. ஆம், தன் குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்பதை ஒரு தாய், கருவில் இருக்கும்போதே முடிவு செய்கிறாள். அது ஆணா? பெண்ணா? என்பதையும் மறந்து சத்தான உணவை அந்த சிசுவிற்கு அளித்து சாணக்கியனாக அவனை வளர்க்கவும் ஆசைப்படுகிறாள்.

அவள் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அவளை சுற்றி இருப்பவர்களும் ஆசைப்பட வேண்டுமல்லவா? அது தான் தேவை என்பதை அவளும் புரிந்துக்கொண்டாலும், எல்லாருக்கும் இந்த விதமான மன அமைதி கிடைப்பதில்லை.

விளைவு, கொதித்தெழும் கோபம் அவள் மனதில் குடிக்கொள்ள குழந்தை பிறக்கும் முன்னே சில தேவையற்ற குணாதிசயங்கள் அவளுக்குள் பிறக்கிறது. இவற்றை எல்லாம் கடந்துதான் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள் இவ்வுலகில்.

அவை என்ன? அவற்றை எல்லாம் எப்படி தவிர்ப்பது? வாருங்கள் பார்க்கலாம்…

தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்:

‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு’ என பேசுபவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நீங்கள் சொல்வது சரியாக இருந்தும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால், மறுவார்த்தை பேசாமல் சிரித்து நகருங்கள். இதனால், உங்கள் கருவில் இருக்கும் குழந்தை கேட்கும் தேவையற்ற சத்தம் தவிர்க்கப்படும்.

கருவின் நலன் கருத வேண்டும் :

“காலத்தின் கட்டாயம் உணர்ந்து நடக்க வேண்டும்” என்பார்கள். ஆனால், கர்ப்பிணி பெண்கள் காலத்தின் கட்டாயத்தையும் தளர்த்தி செயல்படுவது நல்லது. காரணம், உங்கள் அவசரம் உங்களுக்கு தெரியலாம். ஆனால், உங்கள் குழந்தைக்கு தெரியுமா என்ன? யாரோ கூப்பிடுகிறார் என்பதற்காக அவசரமாக ஓடுவது? தேவையற்ற விஷயத்திற்காக பதட்டம் கொள்வது போன்ற விஷயங்களை தவிர்ப்பது மிக நல்லது.

தேவையற்ற ஒளி, ஒலியை தவிர்த்திடுங்கள்:

அமானுஷிய திரைப்படம், மிகவும் மனதை பாதிக்கும் திரைப்படங்கள், மற்றும் சத்தங்களை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால், உங்கள் குழந்தைக்கும் இப்பழக்கம் தொற்றிக்கொள்ள அதிகம் வாய்ப்பிருக்கிறது. விளைவு, காஞ்சனா லாரன்ஸ் போல் குழந்தை பிறந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதனால், இதெல்லாம் இந்த காலக்கட்டத்தில் வேண்டாமே…

அமைதியான இடங்களை தேடி செல்வது:

உங்கள் கருவில் உள்ள குழந்தை உதைத்து அடம்பிடித்து எங்கே செல்ல ஆசைப்படுகிறானோ… அங்கே செல்ல முயல்வது மிக நல்லது. இதனால், உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு அமைதியும், அழகான சூழலையும் நீங்கள் உருவாக்கி தர இயலும்.

பெண் என்பவள் பல வித வலியை சந்திப்பவள் என்பதை அவளது ஒவ்வொரு பருவமும் உணர்த்த, அவள் காணும் இறுதி கட்ட சோதனையாக பிரசவ வலியை கடவுள் தந்தான். ஆனால், அதையும் தாண்டி ஒரு தாய்மையின் மனதை மற்றவர்கள் தளர்த்துவது நாட்டுக்கும், வீட்டிற்கும் கேடு.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon