Link copied!
Sign in / Sign up
5
Shares

கர்ப்பத்தின் போது செய்ய வேண்டிய 6 உடற்பயிற்சிகள்...

மற்ற காலங்களை போலவே கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியமானது. சிறப்பு பரிசாக உடற்பயிற்சி செய்வது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இயற்கையாகவே, கடுமையான பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், ஆனால் எல்லா பயிற்சிகளையும் நிறுத்தக்கூடாது. இங்கே கர்பக்காலத்தில் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் காரணிகளை பார்க்கலாம்.

1. உங்களின் எடை

இயற்கையாகவே கர்ப்ப காலத்தில் உங்களின் எடை அதிகளவில் அதிகரிக்கும். ஆனால், கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்யாதவர்களை விட குறைந்த அளவே எடை அதிகரிப்பிற்கு ஆளாகிறார்கள். எனவே, கர்ப்பக்கால உடற்பயிற்சிகள் பிரசவத்திற்கு பின் ஏற்படும் எடை அதிகரிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

2. பிரசவத்திற்கு தயாராகுதல்

கர்ப்பகால தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் உங்களின் சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றலின் அறிகுறிகளாகும். உங்களின் சக்தி அதிகரிக்கும்போது உங்களின் பிரசவம் மிகவும் சுலபமாக இருக்கும். அதுமட்டுமின்றி வலியையும் குறைக்கும்.

3. நீச்சல்

உடலில் அதிகமாக உள்ள எடையை எளிதாக குறைக்க யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள். நீச்சல் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய எளிதான மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சியாகும், மேலும் குழந்தைக்கு அதிக அழுத்தம் தராமல் செய்யக்கூடிய பயிற்சியாகும். இது உங்களின் எடையை குறைத்து அழகாக காட்டுவதோடு மனஅழுத்தத்தையும் குறைக்கும்.

4. நன்றாக உணர செய்தல்

கர்ப்பம் உங்கள் உடலில் நிறைய ஹார்மோன்களை வெளியிடவிருக்கிறது, அதனால் நீங்கள் நன்றாக உணர உதவுகிற சிலவற்றை ஏன் சேர்க்கக்கூடாது?. உங்கள் உடல் ஒரு பலூன் அளவுக்கு வீங்கி இருக்கும் நேரத்தில் நீங்கள் உள்ளே இருந்து நல்ல உணர மற்றும் ஹார்மோன்கள் வெளியேற உடற்பயிற்சிகள் உதவும்.

5. வலியை குறைக்க

உடற்பயிற்சிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிடிப்புகளை சரிசெய்ய உதவுகின்றன. தினமும் பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாக காலை அசைப்பது உங்களின் கால் வீக்கத்தை குறைக்கலாம். இது உங்கள் மனதை அசௌகரியத்தில் இருந்து தடுக்க உதவுகிறது. மேலும் நன்றாக தூங்குவதால் மனசோர்வும் குறையும்.

6. கவனச்சிதறல்

கர்ப்பகாலத்தின் போது உடற்பயிற்சி செய்வது நீங்கள் அடிமையாக இருந்த சில பழக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கும். புகைபிடிக்கவோ, மது அருந்தவோ தோன்றும் நேரத்தில் ஏன் சில உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது?.உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உடற்பயிற்சிகள் உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon