Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பத்தை கணவரிடம் சொல்ல பத்து அழகிய வழிகள்...

கர்ப்பம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்...' என ஒரு பெண் தன் கணவனிடம் கூறுவது என்பது முதன்முதலில் காதலன் காதலியிடம் காதலை சொல்ல சமம் என்றும் கூறலாம். அவ்வளவு இனிமையான ஒரு விஷயத்தை மிகவும் சாதாரணமாக கூறிவிட்டால் நன்றாக இருக்காதல்லவா? அதற்காகத்தான் இதோ நாங்கள் தருகிறோம்...அழகிய பத்து வழிமுறைகளை...

1. செல்லப்பிராணி உதவி:

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உங்கள் வீட்டின் செல்லப்பிராணி கழுத்தில் எழுதி கட்டிவிடுங்கள். உங்கள் வீட்டு செல்லப்பிராணி உங்கள் கணவரை தேடி செல்ல, அவர் பிரித்து பார்த்து கொள்ளப்போகும் ஆனந்தத்தை வார்த்தையால் வருணிக்க முடியுமா என்ன...

2. இனிப்பு செய்தி:

உங்கள் கணவர் திறந்து பார்க்கும் வகையில் உணவின் உள்ளே எழுதி உங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்துங்கள். இதனால், உள்ளே இருக்கும் இனிப்பு உங்களுக்கு ஊட்டிவிடப்படுமெனில் ஆச்சரியம் ஏது?

3. வார்த்தை விளையாட்டு:

உங்கள் கணவர் அன்றாட பயன்படுத்தும் பொருட்களில் ஒவ்வொரு வார்த்தையாக எழுதி வைத்து அவருக்கு ஆச்சரிய பரிசை தரலாம்.

4. காத்திருக்கும் சந்தோசம்:

மால்களில் தனியாக உங்கள் சந்தோசத்தை தெரிவிக்க ஒரு இடத்தை தேர்வு செய்து உங்கள் ஆசையை கூறிடலாம். இதனால் அவர் சந்தோசத்தின் எல்லையில் துள்ளிக்குதித்திடக்கூடும்.

5. பரிசு அளிக்கலாம்:

நீங்கள் ஒரு சட்டை அவருக்கு அன்பளிப்பாக தரலாம். அந்த சட்டையில், "நான் என் தந்தையை காதலிக்கிறேன்..." போன்ற வசனத்தின் மூலமாக உங்கள் மனதில் இருப்பதை அவருக்கு தெரியப்படுத்தலாம்.

6. அறையில் ஆனந்தம்:

உங்கள் கணவர் வெளியில் சென்றிருந்தால், அவர் வரும் முன்னே ஒரு அறை முழுவதும் குழந்தைகளுக்கு தேவையான சில பொருள் கொண்டு நிரப்பி உங்கள் சந்தோசத்தை அவருக்கு தெரிவிக்கலாம்.

7. ஓவிய பரிசு:

நீங்கள் நன்றாக ஓவியம் வரைவீர்கள் எனில் நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஓவியத்தை வரைந்து அவருக்கு பரிசளிக்கலாம்.

8. வினோத விளையாட்டு:

உங்கள் கணவர் விளையாட்டு பிரியர் என்றால்... அவருக்கு பொருந்தாத..அதாவது குழந்தைகள் விளையாட்டின் போது அணியும் ஆடையை அவருக்கு பரிசாக தரலாம். அவரே குழந்தையாக மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

9. மொபைல் போன் விளையாட்டு:

குழந்தைகள் சிரிப்பது, அழுவது போன்ற ஆடியோவை அல்லது கர்ப்பிணி பெண் குழந்தையை பெற்றுக்கொள்ளும் போது கொடுக்கப்படும் ஒலியை வாட்சப்பில் அனுப்பி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம்.

10. வேடிக்கையான வெளிப்பாடு:

உங்கள் கணவர் தண்ணீர் கேட்டால் அவருக்கு குழந்தைகள் குடிக்கும் தக்கை வைத்த பாட்டிலில் கொடுத்து வேடிக்கையாக உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தலாம்.

இப்படி கர்ப்பம் என்பதை உங்கள் கணவருக்கு தெரியப்படுத்த வினோதமான செயல்களை செய்வது காலத்துக்கும் அழியாமல் மனதிலே நிலைத்திருக்கும் என்பதில் மாற்றம் ஏதும் வேண்டாம் அல்லவா?

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon