Link copied!
Sign in / Sign up
71
Shares

கர்ப்பத்தின் போது, கணவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்..!

பெண்களின் வாழ்விலும், உடலிலும் மனதிலும் பிரசவம் என்பது பல ஆழமான தடங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. கர்ப்பத்தின் போது, சுரக்கப்படும் பல்வேறு ஹார்மோன்களால், பெண்களுக்கு வாந்தி, மயக்கம், அதிகப்படியான சோர்வு, மறதி, பதற்றம் போன்ற உணர்வுகள் ஏற்படும். இவற்றால் பெண்கள் பெரிதும் துன்பப்படுவர்; மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இது வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

இச்சமயங்களில், உங்கள் கணவர் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்; அப்படி அவர் உங்கள் பக்கம், உங்களுக்கு உறுதுணையாக தான் உள்ளார் என்பதை 7 அறிகுறிகளால் அறியலாம்..! அந்த அறிகுறிகள் யாவையென இப்பதிப்பில், காணலாம்…!

1. உறங்க வைத்தல்..

கர்ப்பத்தின் ஹார்மோன்களால் நீங்கள் சோர்ந்து, தூங்க முடியாமல் அவதியுறும் போது, உங்கள் கணவர் ஒரு தாயுமானவனாய் இருந்து உங்களைக் காத்து, ஆறுதல்படுத்தி, தூங்க வைக்க முயல வேண்டும். அவரின் சுக துக்கங்களை மறந்து, அயர்வை விடுத்து உங்களை பார்த்துக் கொள்ள முயலுதல் வேண்டும்.

2. மருத்துவமனைக்கு உடன் வருதல்..

நீங்கள் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள செல்கையில், உங்கள் கணவரும் உடன் வந்து, மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டறிந்து, அதன்படி, உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

3. உணவு..!

கர்ப்ப காலத்தில், அதிகம் உண்ண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். பல உணவு பொருட்களை உண்ண வேண்டும் என்ற ஏக்கம் கொள்வீர். அவை அனைத்தையும், உங்கள் அனைத்து ஆசைகளையும் ஏக்கங்களையும் உங்கள் கணவர் பூர்த்தி செய்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

4. படுக்கையின் ஓரம்..!

நீங்கள் சோர்வாலும் அயர்வாலும் படுக்கையில் புரண்டு புரண்டு படுக்க வேண்டிய நிலை ஏற்படினும், உங்கள் கணவர் படுக்கையின் ஓரத்திலும், தரையிலும் தூங்கி, உங்களைக் கண்ணாய் காக்க வேண்டும்.

5. பழக்கங்களை விடுத்தல்..!

உங்கள் கணவருக்கு புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் இருந்தால், அவற்றை வரவிருக்கும் குழந்தைக்காகவும், உங்களுக்காகவும் விடுத்து, ஆரோக்கிய வாழ்க்கை வாழ பழக வேண்டும்.

6. மறத்தல் கூடாது..!

கருவுற்ற பின், உங்கள் உடலில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், உங்கள் கணவரின் கண்கள் உங்களை உலக அழகியாய் தான் காண வேண்டும். உங்கள் அன்பையும் அழகையும் அவர் மறத்தல் கூடாது.

7. விடுமுறை நாட்கள்..!

விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும் திட்டங்கள் ஏதேனும் இருந்தால், உங்களை முதலில் கருத்தில் கொண்ட பிறகே எவ்வித திட்டங்களையும் தீட்டி செயல்படுத்த வேண்டும்…

இந்த அறிகுறிகளும், பழக்கங்களும் உங்கள் கணவர் கொண்டிருந்தால், நீங்களே அதிர்ஷ்டாசாலி மற்றும் உங்கள் குடும்பமே சிறந்த குடும்பம். உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல பெற்றோர்களை பெறப்போகிறது.. பதிப்பு பிடித்திருந்தால் பகிரவும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon