Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பத்தில் இத்தனை வகைகளா? உண்மைதானா?

பெண்கள் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம் கர்ப்பகாலம்; ஏனெனில் இக்காலம் இரு உயிர் சம்பந்தப்பட்ட மற்றும் பலரின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய விஷயமாகும்..! இந்த முக்கியமான நிகழ்வில் பல விசித்திர சம்பவங்கள், சோக நிகழ்வுகள், விநோதங்கள் நிகழ்கின்றன; இப்படி அதிசயங்களுடன் நிகழும் கர்ப்பத்தில் பல வகைகள் உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இல்லையா... எனில் இந்த பதிப்பில் படித்தறியுங்கள்..!  

முத்துப்பிள்ளை கர்ப்பம்..!

‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம் என்பது கருவறையில் கரு ஒரு உருண்டையாக, ஒரு கருமுட்டையாக உருவாகாமல், பற்பல உருண்டைகளாக உருவாகி, கருவறை முழுதும் நிறைந்திருப்பதே ஆகும். இவ்வாறு உருவான கரு, குழந்தையாக உருமாற இயலாது; இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து சுத்தம் செய்து விடலாம்.

குழாய் கர்ப்பம் 

ஆதியில் ஒரேயொரு உருண்டையாக தோன்றிய கரு, பின்பு இரண்டிரண்டாக பிரியும். அப்படி பிரிகையில், அக்கருமுட்டைகள் பெலோப்பியன் குழாய் வழியாக நகரத் தொடங்கும். இறுதியாக கருவறையில் நுற்றுக்கணக்கான செல்களாக பிரிந்து கரு உருவாக தயாராக இருக்கும்; இது ஆரோக்கியமான கர்ப்பமுறை.

சில சமயங்களில் உருவான கருவானது, கருப்பையை நோக்கி நகர்ந்து செல்லாமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளரத் தொடங்கும். இதையே ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறோம்.

பெலோப்பியன் குழாயில் நோய்த்தொற்று இருந்தால் மட்டுமே இந்நிலை ஏற்படும்; பொதுவாக கருவானது தானாய் நகராது. குழாயின் தசைகள் சுருங்கி விரிவதன் மூலமே கரு நகர்த்தப்படுகிறது. நோய்த்தொற்றால் சேதமடைந்த பெலோப்பியன் குழாய் எனில் சுருங்கி விரியாது அல்லது பெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுத்து நிறுத்தலாம். பெண்களில் சிலருக்கு குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கலாம்; இவ்வாறான குழாய்களால் கருவின் இயக்கம் கண்டிப்பாக தடைபடலாம்..! 

இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னவாகும்? முடிந்தளவு தாங்கி, முடியாத நிலையில் வெடித்துவிடும்; இதனால், கடுமையான வயிற்று வலியும், இரத்தப்போக்கும் ஏற்படும். இந்நிலையில் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். கர்ப்பம் என்று உறுதியான அந்நொடியே மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெற்று வந்தால், இச்சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கலாம்..! 

சோதனைக்குழாய் கர்ப்பம்..!

கருப்பை பலமில்லாத பெண்கள் அல்லது வேறு ஏதேனும் கர்ப்பபை பிரச்சனைகள் இருந்தால், பெண்களால் கருவை தாங்க இயலாது; இதனால் தம்பதியர் வேறு ஒரு பெண்ணை வாடகைத் தாயாக நியமித்து, தங்கள் விந்து மற்றும் அண்ட முட்டைகளை ஊசி மூலம் வெளியே எடுத்து, ஓர் சோதனைக்குழாயில் அம்முட்டைகளை விட்டு வளர்ச் செய்வர்; ஓரளவு வளர்ச்சிக்கு பின்னர், அக்கருவை வாடகை தாயின் வயிற்றில் வளரச் செய்வர்...!

இவ்வாறு ஊசி மூலம் முட்டைகளை எடுப்பது சில நேரங்களில் தம்பதியருக்கும், அவ்வாடகை தாய்க்கும் பிரச்சனை ஏற்படுத்தலாம்; தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தகுந்த முறையில் செய்ய வேண்டும். 

இந்த தொழில்நுட்பங்களை மிஞ்சும் வகையில் குழாயிலேயே முழு கருவும் வளர்ந்து குழந்தையாக மாறும் தொழில் நுட்பங்கள் உண்டாகி, தற்போது பரவி வருகின்றன. பெண்ணின் அதிசய செயலை மிஞ்ச அறிவியல் முயற்சிக்கிறது; இது எங்கு போய் முடியப்போகிறதோ..! பார்க்கலாம்..! பயனுள்ள தகவலை நண்பர்களுடன் பகிருங்கள்..! 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon