Link copied!
Sign in / Sign up
3
Shares

கர்ப்பத்தை உறுதி படுத்துவது ஹார்மோன்களா? எப்படி?

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இல்லையா? என எப்படி நாம் தெரிந்துக்கொள்வது. ஒரு சிலர் வீட்டிலேயே சோதனை செய்துப்பார்த்து, தான் கர்ப்பமாக இருப்பதை 50 சதவிகிதம் உறுதி செய்கின்றனர். ஒரு சிலர், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வதன் மூலம், கர்ப்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரிந்துக்கொள்கின்றனர். ஆனால், கர்ப்பம் என்பதற்கு மூலகாரணமாக இருப்பது என்ன என நீங்கள் அறிவீர்களா? அது தான் ஹச்.சி.ஜி ஹார்மோன்கள்.

இந்த ஹச்.சி.ஜி அளவு கர்ப்பிணிகளுக்கு எப்படி இருக்கும்?

இதன் அளவானது கருவுற்ற நாள் முதல் 10லிருந்து 12 வாரம் வரை சமநிலையில் முன்னேறும். அதன்பிறகு அதே நிலையிலும் இருக்கலாம். குறைந்தும் போகலாம். இதனால் தான் கர்ப்பிணிகளின் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பத்திற்கான அறிகுறிகளை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது.

சாதாரண மாதவிடாய் காலத்தில் காணப்படும் ஹச்.சி.ஜியின் வார அட்டவணை:

3 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 5 – 50 mIU/ml

4 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 5 – 426 mIU/ml

5 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 18 – 7,340 mIU/ml

6 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 1,080 – 56,500 mIU/ml

7 முதல் 8 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 7, 650 – 229,000 mIU/ml

9 முதல் 12 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 25,700 – 288,000 mIU/ml

13 முதல் 16 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 13,300 – 254,000 mIU/ml

17 முதல் 24 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 4,060 – 165,400 mIU/ml

25 முதல் 40 வாரங்கள் (கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து) : 3,640 – 117,000 mIU/ml

கர்ப்பமற்ற பெண்களுக்கு : <5.0 mIU/ml

மெனோபஸ் நிலையை தாண்டிய பெண்களுக்கு : 9.5 mIU/ml

ஹச்.சி.ஜி ஹார்மோன்கள் உருவாவதை எப்படி கண்டுபிடிப்பது?

இந்த ஹார்மோன்கள், சிறுநீர் மற்றும் இரத்தம் மூலமாக கண்டுபிடிக்கப்படும். இதனால் தான் கர்ப்பமாக இருக்கிறாரா? என நடத்தப்படும் சோதனையில் இரு கோடுகள் வருகிறது. 

ஹச்.சி.ஜி  அளவை தெரிந்துகொள்வது எப்படி?

இதன் அளவானது 5mlU/mlக்கும் குறைவாக இருக்குமெனில், கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என அர்த்தமாகும். ஒருவேளை சோதனையின் போது 25 mlU/ml அதிகமாக இருக்கும்போது தான், நீங்கள் கர்ப்பமாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், ஹச்.சி.ஜி ஹார்மோன்கள் மட்டுமே ஒருவர் கர்ப்பத்தை முடிவு செய்துவிடுவதல்ல. ஆனால், அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதை மட்டும் கூறலாம்.

மேலும் ஹச்.சி.ஜி, வயிற்றில் இருப்பது... ஆணா? பெண்ணா? என்றெல்லாம் தெரியப்படுத்தாது. கருவில் உள்ள குழந்தையின் வலிமையையும் தெரிந்துக்கொள்ள ஹச்.சி.ஜி போதாது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon