Link copied!
Sign in / Sign up
13
Shares

கர்ப்பமாக இருக்கும் போது மீண்டும் கர்ப்பமாக இயலுமா?

ஆம் ! அதற்கான பதில் ஆம்தான்! ஆச்சரியமாய் இருக்கிறதா? பல பெண்களிடம் அறிவியல்ரீதியாக நடத்திய ஆராய்ச்சியில் கர்ப்பமாக உள்ள பெண் மீண்டும் கர்ப்பமாக வாய்ப்புள்ளது என்று நிரூபிக்கபட்டுள்ளது.

இது முதலில் ஏன் அதிசய நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது என்று பார்ப்போம். ஆம் இது சாத்தியமில்லாத ஒன்று தான். ஒரு பெண் கர்ப்பமானவுடன் அவர்களின் கர்ப்பமாக்க கூடிய ஹார்மோன்களின் உற்பத்தி நின்றுவிடும். எனவே பெண் கர்ப்பமாக உள்ள போது மீண்டும் கருத்தரிக்க இயலாது.

ஆனால் அறிவியல்பூர்வமாக எப்படி இந்த அதிசய நிகழ்வு நடக்கும் என்ற விளக்கம் உள்ளது. அதாவது, முதல் கரு வயிற்றில் இருக்கும்போது அது ஹார்மோன் சுரப்பதை நிறுத்தியிருக்கும். இந்த காலகட்டத்தில், இரண்டாம் முட்டை கருவளையம் பூரிப்புடன் வெளியிடப்படலாம்! பெண் இப்போது 2 குழந்தைகளுடன் கர்ப்பமாக உள்ளார்.

மிச்செல் ஹட்சின்ஸ் என்ற பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். ஆனால் அவர்கள் இரட்டை குழந்தைகள் அல்ல. பினெல்லி என்ற குழந்தை பிரவுன் கண்களுடனும் மேசி என்ற குழந்தை கருப்பு கண்களுடனும் காணப்படுகிறார்கள். அவர்கள் 5 வார இடைவெளியில் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் ஒரே நாளில் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே எடையில் பல வித்தியாசங்கள் உள்ளது. ஆனால் அவர்கள் மற்ற குழந்தைகளை போலவே வளருகிறார்கள்.

பெரும்பாலும் இந்த முறையில் உருவாகும் குழந்தைகள் ஒரே நாளில்தான் பிறப்பார்கள். சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் உருவான காலத்தை கண்டறிய இயலாது. குழந்தை பிறந்த பின்னர்தான் அவர்கள் மற்ற குழந்தைகளை விட எடை குறைவானவர்களா இல்லையா என அறிய முடியும். ஆனால் தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சியின் மூலம் வயிற்றில் உள்ள குழந்தையை பார்ப்பதோடு முதலில் உருவான குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுத்துவிட்டு இரண்டாவது குழந்தையை வயிற்றுக்குள்ளேயே வளர விடலாம்.

இது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுதான் இதுபோல நடக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் இதை நினைத்து பயப்பட அவசியமில்லை மனித உடலை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் சுவராஸ்யமானதாகும்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon