Link copied!
Sign in / Sign up
4
Shares

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ஒரு பெண் தான் கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த அந்த நிமிடமே வானளவு சந்தோஷத்தை அடைகிறாள்; தாயாகப்போகிறோம், நமக்கென நம் உயிரில் ஒரு குழந்தை உருவாகிவிட்டது என்ற எண்ணங்களே, பெண்ணின் மனதை ரெக்கை கட்டி பறக்கச் செய்கிறது. இத்தகைய கர்ப்பம் என்ற ஒரு நிலையை பெண்கள் அடைந்தவுடன் கட்டாயமாக ஒருசில செயல்களை செய்ய வேண்டும்; அப்படி பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய சில செயல்களை பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..!!

1. யாருக்கும் சொல்ல வேண்டாம்.!

கர்ப்பம் தரித்து முதல் மூன்று மாதங்கள் ஆகும் வரையில், குழந்தை நிலையாய் கருவறையில் தங்கும் வரை, நீங்கள் கர்ப்பமாய் இருப்பதை யாரிடமும் சொல்லாமல் இருத்தல் வேண்டும்; ஏனெனில், விதிவசத்தால், ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தாலும், இது உறவுகளிடையே ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு உருவாவதை தடுக்கும்.

2. உடற்பயிற்சி!

வயிற்றில் உருவாகும் குழந்தையை தாங்கும் கருப்பையை வலிமையாக்க, குழந்தை நன்கு வளர உதவும் சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.

3. உணவு!

இந்த கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலமும் நல்ல சத்தான உணவுகளையும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள் என சத்தான உணவுகளை நன்கு உட்கொள்ள வேண்டும். உடலுக்கு வலிமை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் அனைத்தையும் உணவின் வாயிலாக கர்ப்பிணிகள் பெறுதல் அவசியம்..!

4. குழந்தைக்கான பொருட்கள்..

கர்ப்பம் அடைந்த தருணமே பிறக்கப்போகும் குழந்தைக்காக பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கத் தூண்டும் பெண்ணின் மனது; இந்த தருணத்தில் வீண் செலவுகள் செய்யாது, குழந்தை பிறந்தபின் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற தெளிவுடன் பெண்கள் இருத்தல் அவசியம்..

5. பூச்சுக்கள்..

கர்ப்பம் அடைந்த பெண்கள், முகம் மற்றும் உடலுக்கு உபயோகிக்கும் பூச்சுக்கள் வேதிப்பொருட்கள் நிறைந்தவை; இவற்றால் எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படா வண்ணம் பார்த்து பயன்படுத்துதல் வேண்டும். கூடியவரை இது போன்ற செயற்கை பொருட்களை தவிர்த்து, இயற்கையான பொருட்களை பயன்படுத்த முனைய வேண்டும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon