Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பம் என்பது எந்த வயதில் எப்படி இருக்கும்?

கர்ப்பம் என்பது ஒரு சிலருக்கு தள்ளி போகக்கூடும். அப்படி தள்ளி போனால்... உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். 'இவ்வளவு தாமதமாக கருவுற்றிருக்கிறேனே! நான் என்ன செய்ய வேண்டும்?'... இதுதான் உங்கள் மனதில் எழும் முதல் எண்ணம் என்பதில் மாற்றுக்கருத்து ஏது? இந்த எண்ணம் சரி தானா? கண்டிப்பாக... கர்ப்பம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் காணப்படுவதில்லை. வயதுக்கு ஏற்று மாறக்கூடும். அதைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

வயது 20 முதல் 24 வரை...

கருவுறுதலுக்கான வழக்கமான காலமாக இந்த வயது இருக்கிறது. இந்த வயதில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், இரத்த அழுத்த பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த வயதில் ஏற்படும் கருச்சிதைவின் சதவிகிதமானது 9.5 ஆக இருக்கிறது. ஏனெனில், இந்த வயதில் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் கருமுட்டை என்பது மிகவும் இளமையாக இருக்கக்கூடும். அதனால், உங்கள் உடல்நலத்தில் கவனம் என்பது உங்களுக்கு மிகவும் தேவை.

வயது 25 முதல் 29 வரை...

நீங்கள் சரியான முறையில் உடற்பயிற்சி செய்து சரியான உணவை சாப்பிட வேண்டியது அவசியம். இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு பிரசவம் என்பது எளிதாக, உங்கள் உடல் வடிவமும் சரியான நிலையில் இருந்திடக்கூடும். உங்கள் திருமணம் என்பது மிகவும் தாமதமாக நடந்திருந்தால், உங்கள் மனநிலை என்பதை சரியான நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். இந்த வயதில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவின் சதவிகிதம் என்பது 10 ஆக இருக்கிறது. 

வயது 30 முதல் 34 வரை...

கர்ப்பமாக இருப்பதில் மலட்டு தன்மையை ஏற்படுத்தக்கூடிய வயது தான் இந்த 34 வயது. அதேபோல், 35 வயதுடைய பெண் என்பவருக்கு செயற்கை கருத்தரித்தல் என்பது அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஆய்வின் படி தெரியவருவது என்னவென்றால்... 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 வயது கர்ப்பிணி பெண்களை விட அதிகம் சிசேரியன் செய்கின்றனராம்.

வயது 35 முதல் 39 வரை...

இந்த வயதில் கருத்தரித்தல் என்பது சற்று கடினமான விஷயம் தான். ஏனெனில், பெண்கள் வயிற்றில் இருக்கும் கருமுட்டை என்பது முதிர்ந்த தன்மையுடன் இருக்கக்கூடும். இந்த வயது பெண்களுக்கு இரத்த அழுத்தம் என்பது இரண்டு மடங்கு அதிகம் காணக்கூடும். உயர் இரத்த அழுத்தம் என்பது இந்த வயது பெண்களுக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை காணப்படுகிறது. இந்த வயது பெண்களுக்கு ஒரு சில சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை பெற்று எடுக்கவும், இரட்டை அல்லது மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுக்கவும் அதிகம் வாய்ப்பிருக்கிறது.

வயது 40 முதல் 44 வரை...

இந்த 40 வயதில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பது எப்படி என்பது உண்டான அனுபவம் என்பது வாழ்க்கையின் மூலமாக கிடைத்திருக்கிறது. இருப்பினும், உங்களுக்கு மன அமைதி என்பது வேண்டும் என்பதை புரிந்து செயல்படுவது நல்லது. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இந்த வயதில் ஏற்படும் கர்ப்பத்தால் கருச்சிதைவு என்பது ஏற்படக்கூடும். 

வயது 45 முதல் 49 வரை...

இந்த வயதில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாக குழந்தையையும் வயிற்றில் சுமப்பதற்கு கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. இந்த வயதில் தேவையான ஆற்றல் என்பது உங்கள் உடலில் இல்லாத காரணத்தால் கருச்சிதைவு என்பது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வயது 50க்கு மேல்...

இந்த வயதில் மிகப்பெரிய பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அவை...

1. உயர் இரத்த அழுத்த பிரச்சனை

2. சிறுநீரக கோளாறு

3. நச்சுக்கொடி பிரச்சனை

இருபதில் தொடங்கும் பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஆசை அறுபது வரை சென்றாலும்... நம் கவனம் என்பது எல்லா வயதிலும் மிகவும் அவசியம் என்பதை புரிந்து செயல்படுவதனாலே கருச்சிதைவு என்பதை கடந்து குழந்தையை உங்கள் கைகளில் சந்தோசத்துடன் தாங்க முடியும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon