Link copied!
Sign in / Sign up
5
Shares

கர்ப்பம் அடைந்திருப்பதை உணர உதவும் அறிகுறிகள்..!

அன்புத் தோழிகளே! பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய சந்தோசம் தான் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவது மற்றும் குழந்தையை பிரசவித்து கையில் ஏந்துவது. அப்படிப்பட்ட முக்கியத் தருணமான கருத்தரித்தலை அறிவது எப்படி? மாதவிடாய் தள்ளிப்போனால் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளது என்று எண்ணுவது தவறு; இதுவும் கருத்தரித்தலுக்கான ஒரு அறிகுறியே! ஆனால், இது மட்டுமே முக்கிய அறிகுறி அல்ல. அப்படியெனில், பெண்கள் கருத்தரித்திருப்பதை என்னென்ன அறிகுறிகள் வைத்து, எப்படி அறியலாம் என இப்பதிப்பில் படித்தறியலாம்.., வாருங்கள்..!

மயக்கம் அல்லது தலைச்சுற்றல்

உடலில், சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது குறைந்த இரத்த அழுத்தம் காரணமாகவோ தான், பெண்களுக்கு மயக்கம் மற்றும் தலை சுற்றல் போன்றவை ஏற்படும்; சின்ஹட்ட காரணங்களின்றி, அடிக்கடி மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படின், அது கர்ப்பமே!

குமட்டல்

கரு உருவான 6 ஆம் வாரம் முதல் குமட்டல் ஏற்படும்; இது 2வது மூன்று மாத கால கட்டத்தில் நிற்கும். இதை தவிர்க்க கர்ப்பிணிகள் நொறுக்குத்தீனிகள், இஞ்சிமிட்டாய் போன்றவற்றை உண்ண வேண்டும். 

மூச்சு திணறல்

ஏதேனும் வேலைகளில் ஈடுபடும் போது, மாடி இருக்கையில் என மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டால், அது கர்ப்பத்திற்கான அறிகுறியாகலாம்; மேலும் மார்பகங்களில் மாற்றங்கள் (மென்மையாவது, கடினமாவது, நிறம் மாறுவது, முலைக்காம்பு கறுப்பாவது) அதிகம் ஏற்பட்டால், அதுவும் கர்ப்பத்திற்கான அறிகுறியே! 

சோர்வு

பெண்களின் உடலில் அதிகம் சோர்வு ஏற்படுதல்; இது முதல் 3 மாத காலம் இருக்கும்; பின் விட்டு விட்டு ஏற்படும்.

சிறுநீர் கழித்தல்

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது கர்ப்பத்திற்கு அறிகுறியே! 

தலைவலி மற்றும் முதுகு வலி

தலைவலி மற்றும் முதுகு வலி அதிகம் ஏற்படின், கூடவே, மாதவிடாயிலும் தாமதம் ஏற்படின் அது கர்ப்பமே!

தசைப்பிடிப்பு

வயிற்றில் தசைப்பிடிப்பு போன்ற உணர்வு அதிகம் ஏற்படின் இதுவும் கர்ப்பத்திற்கு ஒரு அறிகுறியாகயிருக்கலாம்.

பசி மற்றும் தாகம்

அதிக பசி உணர்வு ஏற்படுவதும், அஜீரணக்கோளாறு அதிகம் ஏற்படுவதும் கர்ப்பத்தின் அறிகுறியாகலாம்.

வீக்கம் மற்றும் மலச்சிக்கல்

உடல் எடை அதிகரிப்பு அல்லது வீக்கம் மற்றும் மலச்சிக்கல் அதிகம் ஏற்படின் அதுவும் கர்ப்பத்திற்கு காரணமாகலாம்..!

மனம்

மனதின் நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்; சந்தோசம், துக்கம் போன்ற உணர்வுகள் கடலலை போல் மனதில் எழுந்து, மனதை அலைக்கழிக்கும்; இதுவும் கர்ப்பத்தின் அறிகுறியே! 

வெப்பநிலை அதிகரிப்பு

நீங்கள் குழந்தைக்காக தீவிரமாக முயன்று கொண்டிருந்தாள், உங்கள் உடலின் அடிப்பகுதி வெப்பநிலை அதிகரித்துவிடும்; இது கருத்தரித்தலுக்கு அடித்தளமாக அமையலாம்..

ஸ்பாட்டிங்

மாதவிடாய் நாளுக்கு முன்னதாக, சிறிது இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கரு உருவாவதன் அறிகுறியே! இதனை ஸ்பாட்டிங் என்று கூறுவர். இது கரு கருப்பையில் நிலைப்படுதலைக் குறிக்கும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon