Link copied!
Sign in / Sign up
3
Shares

கர்ப்பகாலத்தில் வீங்கிய பாதங்களை சரிசெய்யும் 5 வீட்டு மருந்துகள்..!

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தால், கர்ப்பிணிகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் மாற்றங்களோடு, சில வலிகளையும் பெண்களுக்கு அளிக்கின்றன. அப்படி அளிக்கும் வேதனைகளில் முக்கியமானது, பாதத்தில் ஏற்படும் வீக்கம். இந்த வீக்கத்தால், பெண்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய இயலாமல்,  வேதனையில் வாடுகின்றனர். இந்த வேதனைக்கு தீர்வினை நல்கவே, இந்த பதிப்பு..!

1. உப்புநீர்..

நீரினில் உப்பு சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். மிதமான சூடுள்ள நீரில், கர்ப்பிணிகள் கால்களை 10-15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இந்த உப்புநீர் பாதத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, வீக்கம் வற்றிட உதவும். இதை தூங்குமுன் செய்யவும்; தூங்கி எழுந்ததும் மாற்றத்தை நீங்கள் உணரலாம்...

2. முட்டைக்கோஸ்..

முட்டைக்கோஸ் இலைகள் கிருமிகளை அப்புறப்படுத்த உதவும். ஆகவே, அவற்றை பாதத்தில் வைத்து காட்டன் துணி கொண்டு முடிவும். பின் பாதத்தின் பிற பகுதிகளில் இதே மாதிரி வைத்து, செய்முறையை மீண்டும் செய்யவும். ஆனால், இலையை ஒரே இடத்தில் நீண்ட நேரம் வைத்துவிடக் கூடாது; மாற்றி மாற்றி வைத்தல் வேண்டும். இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு ஓரிரு முறை செய்தல் வேண்டும்..!

3. வெள்ளரி..

வலி உள்ள இடத்தில வெள்ளரியை 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது பாதத்திற்கு குளுமையை அளித்து, பாதத்தின் வீக்கத்தை குறைக்க பேருதவி புரியும்..

4. மல்லி விதைகள்..

மல்லிவிதைகளை நீரில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின்னர், அந்நீரை காய்ச்சி, பின் நீரை ஆற வைக்கவும்; ஆறிய நீரை குடிக்கவும். இது பாதத்தின் வீக்கத்தை எளிதில் அகற்றிவிடும்; நன்கு பலனளிக்கும்..!

5. நீர்ச்சத்து..!

கர்ப்பகாலத்தில் உடலில் வறட்சி ஏதும் ஏற்படாமல், நன்கு தண்ணீர், திரவ உணவுகள் மற்றும் பழச்சாறு பருகி உடலை நீர்ச்சத்து நிறைந்ததாய் வைத்திருக்கவும். இது உடலில் வீக்கம் ஏதும் ஏற்படாமல் காக்கும்; மேலும் பாத வீக்கத்தை எளிதில் மாயமாக மறைய வைத்துவிடும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon