Link copied!
Sign in / Sign up
4
Shares

கர்ப்பகாலத்தில் பாதாம் உண்பதால் ஏற்படும் 10 நன்மைகள்..!!

கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பகாலத்தின் போது, பாதாம் உண்பது நல்லது என கேள்வியுற்றிருப்பீர்; ஆனால், பாதாம் அதிகம் உண்பதும் நல்லதல்ல என்றும் கேள்வியுற்றிருப்பீர். இதில் எது உண்மை? எது பொய்? என்று குழப்பம் உங்கள் மனதில் நிலவுகிறதா? இந்த விஷயத்தில் உங்கள் குழப்பத்தை தெளிவு செய்யும் வகையிலேயே இந்த பதிப்பை அளிக்கிறோம்..!! பாதாம் உண்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு படித்து பயனடையுங்கள்..!!

பாதாம் உண்பதால் ஏற்படும் 10 நன்மைகள்..!

1. பாதாம் போலிக் அமிலம் நிறைந்த ஒரு பருப்பு வகை; இந்த அமிலம் நிறைந்திருப்பதால் இது கருவின் வளர்ச்சியை தூண்டக்கூடியது; ஆகையால், கருக்கலைப்பு உண்டாவதை தடுக்க வல்லது பாதாம்.

2. பால்டம், விட்டமின் B6 போன்ற சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளதால், இது கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

3. கர்ப்பிணிகள், பாதாமை தினசரி உட்கொண்டால் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் எளிதாக, அதிகமாக கிடைக்கும்; இதனால், கர்ப்பிணிகள் பலவீனமாக உணர்வதோ, காலையில் தோன்றும் பலவீனம் போன்றவை நீங்கும், அதாவது இக்குறைபாடுகள் ஏற்படாது.

4. பாதாமில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளதால், இது கர்ப்பிணிகளில் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

5. இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால், இது கர்ப்பிணிகளின் எலும்பை பலமாக்குகிறது. 

6. இது பிரசவ சமயத்தில் அவர்களுக்கு வலி ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் செரிமான குறைபாட்டையும் போக்க உதவும்.

7. இதில் விட்டமின் E நிறைந்துள்ளது; இது குழந்தையின் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும்; இதனால் கர்ப்பிணிகள் அழகாக தோன்றுவார்கள்.

8. பாதாம், அதிக கால்சியம் சத்துக்களை கொண்டுள்ளதால், கர்ப்பிணிகளின் எலும்புகள் நன்கு பலமடைகின்றன.

9. பாதாம், அதிக பொட்டாசியத்தைக் கொண்டுள்ளதால், இது கர்ப்பிணிகளின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

10. பாதாம், கர்ப்பிணிகளின் தோல் மங்கிவிடாமல், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க மிகவும் உதவுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon