Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பகாலம் தரும் 7 அழகான விஷயங்கள் என்னென்ன தெரியுமா?!

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் பலவித ஹார்மோன்கள் சுரக்கின்றன; உடல் மற்றும் மன அளவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன; இந்த ஹார்மோன் சுரப்பும், மாற்றங்களும் கர்ப்பிணிகளுக்கு அழகினை அள்ளித்தருகின்றன. அவ்வாறு கர்ப்பகாலம் கர்ப்பிணிகளில் ஏற்படுத்தும் அழகான மாற்றங்களை பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. முகப்பொலிவு..!

கர்ப்பத்தின் முதல் 3 மாதத்திற்கு பின், உங்கள் முகம் மற்றும் உடல் பொலிவு பெற்று அழகுடன் திகழ்வதைக் காணலாம். இது கர்ப்பகால ஹார்மோன் மாற்றத்தால் நிகழும் மாயாஜாலம்.

2. மார்பக வளர்ச்சி..!

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையில், உங்கள் மார்பகங்கள் வட்டவடிவமாக, முழுமையான வளர்ச்சி பெற்று ஒருவித அழகான தோற்றத்துடன் விளங்கும். இது உங்களுக்கு அழகான தோற்றத்தை அளிக்கும்.

3. கூந்தல்..!

கர்ப்பகாலத்தில் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால், உங்கள் கூந்தல் உதிர்வு குறைந்து, முடி கருமையாக, அடர்த்தியாக வளரத் தொடங்கும்..

4. நீளமான நகங்கள்...!

கர்ப்பகாலத்தின் 4-6 மாத காலத்தில் உங்கள் நகங்கள் நன்கு நீளமாக வளரும். இந்த காலகட்டத்தில் உங்கள் 'நெய்ல் ஆர்ட்' திறமையை நன்கு வெளிப்படுத்தலாம்.

5. Chubby Cheeks, Rosy Lips

நல்ல பொலிவான குண்டு கன்னங்களும், அழகான உதடுகளும் உங்கள் கர்ப்பகால ஹார்மோனால் ஏற்பட்டு உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும்.

6. எடை..

கர்ப்பத்தால் உங்கள் வயிறு பெரிதாகாலம்; உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம். ஆனால், அது உங்களுக்கு ஒருவகை அழகைத் தரும். ஆனால், தோழியரே பிரசவம் முடிந்து, குழந்தை ஓரிரு வயதை எட்டியவுடன், அதிகரித்த உடல் எடையை கட்டுக்குள் வைத்து உங்கள் அழகான தோற்றத்தை மீண்டும் பெற முயற்சி செய்யுங்கள்..

7. மிருதுவான சருமம்..

கர்ப்பகாலத்தில் உங்கள் சருமம் மிகவும் மிருதுவாக மாறும். நன்கு தண்ணீர் பருகுவதால், உடல் தோற்றத்தின் அழகை மேலும் மெருகூட்டலாம்.

பெண்களே! நீங்கள் சாதாரணமாகவே அழகு தான்; உங்கள் அழகை மேலும் அழகுபடுத்தி காட்டுகிறது, கர்ப்பகாலம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon