Link copied!
Sign in / Sign up
44
Shares

கர்ப்பகாலத்தில், செய்யக் கூடாத வீட்டு வேலைகள்...!

 
கர்ப்பகாலத்தில் வேலைகளை செய்வது மிகவும் நல்லது என்று நினைத்து சில கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள். கர்ப்ப காலத்தில் வேலை செய்வது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்றாலும், ஒரு சில வேலைகளை செய்யாமல் இருப்பது சிறந்தது.
 
ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் சில வேலைகளை கர்ப்ப காலத்தில் செய்யாமல் இருப்பது நலம்.
 
 செய்யக்கூடாத வேலைகள்..!
  • நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் வேலையை, வேதிப்பொருட்களை பயன்படுத்தி செய்ய வேண்டாம். நீங்கள் வீட்டை துடைத்து சுத்தமாக்க பயன்படுத்தும் சோப்பு மற்றும் இதர வேதிப்பொருட்கள் போன்றவை கர்ப்ப காலத்தில், உங்களது தோலில் ஒவ்வாமையை உண்டாக்கும்
  • கர்ப்ப காலத்தில், நீங்கள் மிகவும் அதிகமாக வளைவது ஆபத்தை உண்டாக்கும். வீடு துடைக்கும் வேலையை செய்யாமல் இருப்பது நல்லது
  • கர்ப்ப காலத்தில் உங்களது மூட்டுகள் மற்றும் எலும்புகள் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே நீங்கள் மிக அதிகமாக உங்களது உடலை வருத்திக்கொள்ள கூடாது
  • நீங்கள் வீட்டில் பூனை வளர்த்துவருபவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அதை குளிக்க வைக்க வேண்டாம்
  • குளியறை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த வேலைகளை தவிர்ப்பது நலம்

  • துணி துவைப்பதும் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாத வேலைகளில் ஒன்றாகும். நீண்ட நேரம் குனிந்து நிறைய துணிகளை துவைப்பது உங்கள் இடுப்புக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். துணி துவைக்கும் இடங்களில் உள்ள சோப்பு நுரைகளால் நீங்கள் கீழே விழக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்
  • கனமான பொருட்களை தூக்க வேண்டிய வேலைகளை தவிர்க்க வேண்டும். இது உங்களது முதுகு பகுதிக்கு சிறந்தது அல்ல
  • ஏணிகளில் ஏறுவது போன்ற வேலைகளை செய்வதும் கர்ப்ப காலத்தில் கட்டாயமாக கூடாது
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon