Link copied!
Sign in / Sign up
3
Shares

கர்ப்பகால பிடிப்பினால் அவஸ்தையா? இதோ 5 தீர்வுகள்…

கர்ப்பகாலம் உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தரும். இதை சுகமான சுமை என்றே கூறலாம். கர்ப்பகாலத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் கர்ப்பகால பிடிப்புகள். திடீரென வயிற்றில் பிடிப்பு அல்லது வயிற்றில் உபாதைகள் ஏற்படுவதை யாராலும் முன்கூட்டியே அறிய முடியாது. வயிற்றின் இருபுறமும் இழுப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டால், அது அநேகமாக பிடிப்பாக தான் இருக்கும். உங்கள் குழந்தைக்கு இடமளிக்க உங்கள் கருப்பை வளர்ந்து கொண்டிருப்பதால், அதை சுற்றி இருக்கும் தசை பகுதி விரிவடைய துவங்கி இருக்கும். இதனால் உங்களுக்கு பிடிப்புகள் ஏற்படும். இங்கு கர்ப்பகால பிடிப்பிற்கான 5 தீர்வுகளை பார்க்கலாம்.

1. சுடுநீர் பாட்டில்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்

கர்ப்பகாலத்தில் பிடிப்புகள் ஏற்படும் போது, அதை சரி செய்ய சுடுநீர் நிரம்பிய பாட்டிலை வயிற்றில் வைப்பது அனைவரும் செய்ய கூடிய ஒன்று. இது நல்ல பலனை தந்தாலும், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இது நல்லதல்ல. அடிவயிற்றில் மட்டும் வெப்பத்தை அதிகரிப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் ஒரு பாகத்தில் மட்டும் வெப்பத்தை கொடுக்காமல், நீண்ட நேரம் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.

2. நடப்பது

உங்கள் வயிற்றில் பிடிப்பின் காரணமாக யாராவது குத்திக் கொண்டிருப்பதை போல் உணர்ந்தால், நீங்கள் நடக்க துவங்குங்கள். இது வலி மிகவும் மோசமாகாமல் குறைக்கும். மேலும், நடப்பது உங்கள் கவனத்தை திசை திருப்பி வலியை உணரவிடாமல் செய்யும். நடப்பது உங்களுக்கு கடினமான ஒன்றாக தோன்றினால், குறைந்தது உங்கள் நிலையையாவது மாற்ற முயற்சியுங்கள்.

3. நீர் அருந்துதல்

கர்ப்பகாலத்தில் அதிகமாக நீர் அருந்துவது அவசியமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் வயிற்றில் பிடிப்பு ஏற்படும் போதும் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். நீரில் இருக்கும் கேலன்கள், உங்களுக்கு நல்ல பலனை தரும். நீர் மட்டும் குடிப்பது சலிப்பை ஏற்படுத்தினால், நீங்கள் ஆல்கஹால் தவிர மற்ற திரவங்களை அருந்தலாம்.

4. கால் பிடிப்பு

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வயிற்றுப் பிடிப்புகள் மட்டும் ஏற்படுவதில்லை. கால்களில் ஏற்படும் பிடிப்புகளும் பொதுவானவை தான். அதிகரித்திருக்கும் உடல் எடையை தாங்குவதால், இரத்த நாளத்தில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தால் கால்களில் பிடிப்புகள் ஏற்படுகின்றன. கால்களில் பிடிப்பு ஏற்படும் போது, இடதுபுறமாக படுப்பது இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும். இதை தவிர்க்க படுக்க செல்லும் முன் முடிந்த வரை நடக்கவும். உங்கள் கால் தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரி செய்ய வெதுவெதுப்பான நீர் ஒரு நல்ல நிவாரணி.

5. உதவி

வீட்டு மருத்துவத்திற்கு சரியாகாமல் பிடிப்பு அதிக நேரம் தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. உங்கள் பிடிப்புக்கள் கருப்பை வாய் அல்லது சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி இருந்தால், அது சிறுநீர் பாதை நோய்த்தொற்றாக இருக்கலாம். இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவு அறிகுறியாக இருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில், எப்போதும் மருத்துவ உதவியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon