Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்ப காலத்தில் முடி அகற்ற க்ரீம் தேவைதானா?

ஒரு சில பெண்கள் தன் மேனியை பாதுகாக்க முடியை அகற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பர். நகரத்தில் சில பெண்கள் பியூட்டி பார்லர் போவது மூலமாக தன் விருப்பத்தை நிறைவேற்றி கொள்கின்றனர். சிலர், வீட்டிலே கீரிம் வாங்கிவைத்து பயன்படுத்துவது உண்டு. பொதுவாக, கர்ப்ப காலத்தில் பெண்களின் சருமம் மிகவும் பளபளப்புடன் காணப்படக்கூடும். இந்த காலக்கட்டத்தில் கால்களுக்கு இடையே முடி வளர்ந்திருப்பது போன்ற உணர்வுகளும் உண்டாகிறது. இருப்பினும், கால்களுக்கு இடையே ரேசர் பயன்படுத்த முடியாததால் முடியை அகற்றும் கிரீமை வாங்கி பயன்படுத்துவார்கள்.

கர்ப்பிணி பெண்கள், இந்த முடி நீக்கும் கிரீமை பயன்படுத்துவது சரிதானா? இல்லையெனில், இதனால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி முடி நீக்கும் கிரீமை பாதுகாப்பாக பயன்படுத்துவது?

முடி நீக்கும் கிரீமை பயன்படுத்தும்போது அதில் எந்த வகையான கெமிக்கல் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில், ஒவ்வொரு கிரீம் வகையும் ஒவ்வொரு கெமிக்கலால் ஆனது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இதனால், ஒரு பிளேவர் உங்களுக்கு ஒத்து கொள்ளலாம். இன்னொரு பிளேவர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே, பயன்படுத்தும் கிரீமை மாற்றாமல் அதே கெமிக்கல் கொண்டதை வாங்கி பயன்படுத்துவது நல்லது. எதையும் யூகித்து செயல்படுவதை தவிர்த்திடுங்கள். தெளிவாக இருந்தால் மட்டுமே செயல்படுத்த முன்வாருங்கள். இது உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நன்மை தரும். ஒருவேளை, மற்றவர்கள் பரிந்துரை செய்தால் கூட, டாக்டரிடம் ஆலோசனை பெறாமல் அதை முயற்சி செய்து பார்க்காதீர்கள்.

முடி நீக்கும் கிரீமை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை:

கர்ப்பிணிகள் பலரும் தங்கள் சருமத்தின் முடியை நீக்க கிரீமை பயன்படுத்துவதை சவுகரியமாக உணர்கின்றனர். ஷேவிங்க் போன்றவற்றை விட, கிரீமை பாதுகாப்பாக எண்ணுகின்றனர். மேலும், கர்ப்ப காலத்தில் முடியானது மிகவும் அடர்ந்து காணப்படுவதால், அழுத்தி ரேசர் உபயோகிப்பது பாதுகாப்பற்றது என பெண்கள் கருதுகின்றனர். இதனால், கிரீம் அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் முடி நீக்கும் கிரீமை பயன்படுத்தும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்:

#1

கிரீமை உபயோகிக்கும் முன்னர், உங்கள் சருமத்தின் சிறு பகுதியில் அதை தடவி., உங்கள் உடல் ஏற்றுக்கொள்கிறதா? என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவும். ஒருவேளை, கிரீம் பயன்படுத்தியதால் அலர்ஜியை தாங்கள் உணர்ந்தால், தயவுசெய்து டாக்டரின் ஆலோசனை அற்று அதை மீண்டும் முயற்சி செய்யாதீர்கள். பேட்ச் டெஸ்ட் சோதனைக்கு உங்கள் உடலின் பகுதியை தேர்ந்தெடுப்பதிலும் டாக்டரின் ஆலோசனை அவசியமாகிறது.

#2

முடி நீக்கும் கிரீமில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை சரி பார்க்கவும். இதனால், பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கெமிக்கல் அல்லது மூலப்பொருட்கள் அதில் இருந்தால், அதனை நீங்கள் தெரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும். எப்போதும், வாங்கியவுடன் பயன்படுத்தி விடாமல், காலாவதி தேதி, கலக்கப்பட்டிருக்கும் பொருள் முதலியவற்றை தெரிந்துக் கொள்ளவேண்டியது மிக முக்கியம்.

#3

கர்ப்ப காலத்தில் உங்கள் சருமமானது பல மாறுதல்களை சந்திக்கிறது. எனவே, உங்களுடைய உடம்பில் பிரதான தோலுக்கு ஏற்ற கிரீமை தேர்வு செய்யவேண்டும். டாக்டரின் ஆலோசனையும் அவசியமாகிறது...

#4

உங்கள் சருமத்தின் வெடிப்புற்ற பகுதியில் கிரீம் தேய்ப்பதை தவிர்க்கவும்.

#5

உங்கள் முகத்தில் தடவ முயற்சி செய்யாதீர்கள்.

#6

உங்கள் சருமத்தில் தடவிய பின்னர், வெகுநேரத்திற்கு வைத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் கழுவிவிட வேண்டும்.

#7

முடியை நீக்கும் கிரீமின் மணமானது உங்களுக்கு தலைவலி அல்லது குமட்டலை உண்டாக்காமல் இருத்தல் வேண்டும்.

#8

நன்கு வாசம் வீசும் கிரீமாக இருந்தால், காற்றோட்டமான அறையில் வைத்து பயன்படுத்துவது நல்லது. இதனால், அந்த வாசத்தை காற்று நுகர்ந்திடக்கூடும்.

கர்ப்பிணி பெண்களே! முடி அகற்ற கிரீம் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், அதை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். ரேசர் போன்றவை நமக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், நம் குழந்தைக்கு அது என்னெவென்றே தெரியாது. நீங்கள் ரேசர் பயன்படுத்த, அதை கருவில் இருக்கும் குழந்தை உணரும் என்றால்... என்ன செய்யும்? பாவம், நான்கு புறம் வேற வர முடியாமல் வயிற்றில் வைத்து அடைத்து விட்டோம். அதனால், பிதாமகன் விக்ரம் போல் உதை மட்டுமே உங்களுக்கு அக்குழந்தையால் கொடுக்க இயலும்... ஜாக்கிரதை...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon