Link copied!
Sign in / Sign up
7
Shares

கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 விஷயங்கள்

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வேண்டியது அனைத்தையும் கொடுப்பார்கள். அவர்கள் விரும்புவது, விரும்பியது என அனைத்தையும் செய்ய விடுவார்கள். அவர்கள் சாப்பிட விரும்புவதை எல்லாம் செய்து தருவார்கள். கர்ப்பத்தில் உங்கள் கடமைகளை குறைத்து கொண்டு, நீங்கள் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தருணம். உங்கள் அன்பிற்குரியவர், உங்கள் நண்பர்கள், பெற்றோர் உறவினர் என அனைவரும் உங்களை கவனித்து கொண்டாலும், நீங்களும் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இங்கு  கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

1 மது அருந்துதல்

மது அருந்துதல் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் மருத்துவர் மது அருந்துவதை தவிர்க்க உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். குழந்தைகள் ஆல்கஹாலை நுகர்ந்தால், மனநிலை பாதிக்கப்படும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். மேலும், இது உங்கள் பிறப்புறுப்பு பகுதியை இறுக செய்து, பிரசவத்தை கடினமாக்கி விடும். கர்ப்பகாலத்தில் கட்டாயம் மதுவை தவிர்க்க வேண்டும்.

2 சூடான குளியல்

சூடான மற்றும் நீராவி குளியல் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சுடுநீர் நிறைந்த பையை வயிற்றின் மீது வைப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உங்களது கருப்பை சூடாகும் போது, அது குழந்தையின் அமைதியை பாதிக்கும் மற்றும் பல மோசமான சூழ்நிலையில் குழந்தை இறக்கவும் நேரிடும்.

3 உடற்பயிற்சி

கர்ப்பகாலத்தில் செய்யும் மிதமான உடற்பயிற்சி கர்ப்பிணிகளுக்கு பல நன்மைகளை தரவல்லது. உடற்பயிற்சி உடலுக்கு நெகிழ்வு தன்மையை தருகிறது. இது பிரவத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகிறது. ஆனால், அதிகப்படியான உடற்பயிற்சியை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அது ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் இதய துடிப்பு 160 bpm க்கும் அதிகமானால், உங்கள் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டிருக்கும். இதனால் குழந்தையின் மூளையை நிரந்தரமாக பாதிக்கும் அபாயம் உள்ளது. மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் உடற்பயிற்சியில் யோகாவை சேருங்கள்.

4 நீண்ட நேரம் நிற்பது

கர்ப்பிணிகள் நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து நிற்க கூடாது. தொடர்ந்து இருப்பதால் நரம்பு பிடிப்பு மற்றும் கால் வீக்கம் போன்றவை ஏற்படும். நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து நிற்காமல் சிறிது நேரம் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ இருக்கலாம்.

5 கவலை

கவலைப்படுவது நீங்கள் சிந்திப்பதை விட மோசமாக ஆபத்தை ஏற்படுத்தும். கருவில் இருக்கும் குழந்தையால் சுற்றி இருக்கும் சூழலை நன்கு உணர முடியும். நீங்கள் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தை பற்றி கவலைப்பட்டாலோ அல்லது பயப்பட்டாலோ உங்கள் குழந்தையும் பயப்படவும், கவலைப்படவும் துவங்கும். நீங்கள் மகிழ்வாக இருந்தால், உங்கள் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

6 புகை பிடித்தல்

நீங்கள் புகை பிடித்தால், மறுபடியும் அதைப்பற்றி நினைப்பீர்கள் என்று அர்த்தம். சிலர் புகைபிடிக்கும் போது அருகில் கூட இருக்காதீர்கள். புகைபிடிக்கும் போது அருகில் இருந்து சுவாசித்தாலும் குழந்தையை பாதிக்கும். அப்படி சுவாசிக்கும் போது, குறைப்பிரசவம், பிறப்பு குறைபாடுகள் மற்றும் ஹைபோக்ஸியா போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, புகைபிடிப்பதை தவிர்த்தும், புகைபிடிப்பவர்களின் அருகில் இல்லாதபடியும் இருக்க வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon