Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பிணிகளுக்கான சிறந்த ஆடை

கர்ப்பகாலம் என்பது ஆனந்தத்தை அள்ளி கொடுத்தாலும், பெண்களின் உடலில் ஹார்மோனால் பல மாற்றங்கள் ஏற்படும். இது அவர்களை சிரமத்திற்குள்ளாக்கும். பெரும்பாலும் பெண்கள் கர்ப்பத்திற்கு முன் அணிந்த ஆடைகளை அதன் பின் அவர்களால் அணிய முடியாது. அவர்களுக்கு மிகவும் பிடித்த ஆடைகள் கூட இறுக்கமானதாக மாறி இருப்பது, அவர்களை கவலையடைய செய்யும். என்னதான் இரவு நேர ஆடைகளான நைட்டி சிறந்த ஆடையாக இருந்தாலும், அவற்றை வெளியில் அணிந்து செல்ல முடியாது. கர்ப்பிணிகளுக்கான உடைகளைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்று. இங்கு கர்ப்பகாலத்தில் அணிவதற்கான சிறந்த ஆடைகளை பார்க்கலாம்.

பொதுவாகவே கர்ப்பகாலத்தில் தளர்வான, லேசான உடைகள்தான் ரொம்பவும் சரியான தேர்வாக இருக்க முடியும். வயிற்றுக்கும், மார்புக்குமானவை வசதியானதாகவும், தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

1 எலாஸ்டிக் அல்லது சைட் கட் உடைகள்

சல்வார், குர்தா, லாங் டாப்ஸ் மாதிரியான உடைகளில் "சைட் கட்" இருந்தால் ஓகே. இந்த உடைகள் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் பிரசவ காலத்துக்குப் பிறகும் கூட நீங்கள் அணியலாம்.

2 லெக்கிங்ஸ்/ ஜெக்கிங்ஸ்

இந்த வகை பேண்ட்டுகள் ரொம்ப நல்ல தேர்வாக இருக்கலாம். காட்டன் மாதிரியான லெக்கிங்ஸை தேர்வு செய்வது சிறந்தது. குர்தா, லாங் டாப்ஸ், சல்வார்களுக்கு ஏற்ற மாதிரி தேர்வு செய்யலாம். ஜீன்ஸ் மாதிரி தோற்றமளிக்கக் கூடிய ஜெக்கிங்ஸையும் தேர்வு செய்யலாம்.

3 லைக்ரா/ காட்டன் டி சர்ட்ஸ்

கர்ப்பிணி பெண்களுக்கு பொருந்தக் கூடிய உடைகளில் ஒன்று. ரொம்பவும் மார்டனாகவும் இருக்கும். விலையும் ரொம்ப குறைவானது. கர்ப்பகாலத்தில் வசதியான ஆடையாக உணர செய்யும்.

4 சேலைகள்

பெரும்பாலான இந்தியப் பெண்கள் கர்ப்பகாலத்தில் மிகவும் விரும்பி அணிவது சேலைகள்தான். நமக்கெல்லாம் இதுதான் ரொம்ப நல்ல தேர்வு. குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப வயிற்றில் ஏற்படும் மடிப்புகளுக்கு ஏற்ப ரொம்ப வசதியானதாக இருப்பவை சேலைகள்தான். குழந்தை பிறந்த பிறகும்கூட சேலை தான் சிறந்த தேர்வு. இது தளர்வாகவும், நம் விருப்பத்திற்கேற்ப வசதியாக மாற்றி கொள்ளும் படியும் இருக்கும்.

5 அங்கிகள்  

குளிர்காலத்தில் அங்கிகளை அணிவது ரொம்ப நல்லது. ஸ்வெட்டரை விட சிறந்தது இது. எல்லா வகையான அளவுகளிலும் இது கிடைக்கிறது. இது மிகவும் வசதியானதாகவும் இருக்கும்.

இது எல்லாமே கர்ப்ப காலத்துக்கு மட்டும்தான். பிரசவத்துக்குப் பிறகு நீங்கள் எப்பவும் போல உங்களுக்குப் பிடித்தமான உடைகளுக்கு மாறிக் கொள்ளலாம்

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon