Link copied!
Sign in / Sign up
29
Shares

கர்ப்பிணிகளுக்கான 9 வகை வளைகாப்பு உணவுகளின் செய்முறை - வீடியோ

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சாப்பிடுவதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கமாட்டார்கள். விரும்பியதை சாப்பிட அனுமதிப்பார்கள். கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மாங்காய் சாப்பிட விரும்புவார்கள் என்று திரைப்படங்களில் பார்த்து பார்த்து நம் மனதில் பதிந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. சில பெண்களுக்கு மாங்காய் சாப்பிட பிடிக்கும். இது ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப மாறும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். 

கர்ப்பகாலத்தில் அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுவார்கள். தாய் சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு உணவு கிடைக்கும். உணவின் சுவையை குழந்தையும் உணரும். கர்ப்பத்தின் 5 -வது மாத வளைகாப்பில் 5 வகை உணவும், 7 -வது மாத வளைகாப்பில் 7 வகை உணவும், ஒன்பதாவது மாதத்தில் ஒன்பது வகை உணவும் கொடுப்பார்கள். சிலர் இதை விட அதிகமாகவும் கொடுப்பார்கள். இங்கு கர்பிணிகளுக்கான 9 வகை வளைகாப்பு உணவுகளின் செய்முறை வீடியோவை பார்க்கலாம்.

Video Credits : Amma Samayal

என்னதான் கணவரின் வீட்டில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், கர்ப்பகாலத்தில் பெண்கள் தாய் வீட்டில் இருப்பதையே விரும்புவார்கள். வளைகாப்பின் போது பெற்றோர் செய்து கொடுக்கும் உணவு, கர்ப்பிணிகளின் வயிறு மற்றும் மனதை நிறைய செய்து விடும். அவர்கள் வளைகாப்பு முடித்து தாய் வீட்டிற்கு அழைத்து செல்வார்கள் எனும் மகிழ்ச்சியும் உடன் ஒட்டிக் கொள்ளும். இதற்காகவே பெரியவர்களால் வளைகாப்பு நடத்தப்படுகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon