Link copied!
Sign in / Sign up
22
Shares

கர்ப்பிணி பெண்கள் கேட்க கூடிய மற்றும் கேட்க கூடாத வார்த்தைகள்

கருவறையில் வளரும் போதே, சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்துவிடுகிறது. கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் நேரடியாகவும் சரி, சில வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது அவர்களை மனதளவில் பாதிப்படைய வைக்கலாம். இது அவர்களது குழந்தையும் பாதிக்கும். அவர்கள் சிலவற்றை தினமும் கேட்கவும், சொல்லவும் வேண்டும். அப்படி அவர்கள் கேட்க கூடியவை மற்றும் கேட்டாக கூடாதவைகளை இங்கு பார்க்கலாம்..

கர்ப்பிணி பெண்கள் கேட்க கூடாதவை

1 பிரசவிக்கும் போது வலி அதிகம் ஏற்படும், நீ தாங்கிக் கொள்வாயா? என்பது போல கர்ப்பிணி முன்பு பேசவே கூடாது. இது அவர்களை மனதளவில் பெரிதாய் பாதிக்கும்.

2 ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதிரி வயிறு வெளியே தெரியும். அதற்காக வயிறு மிகவும் சிறியதாய் இருப்பது போல தெரிகிறது, மருத்துவரிடம், குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறதா என கேளு என்பது போல பேச வேண்டாம். மாதம் மாதம் பரிசோதிக்கும் மருத்துவர் அதை கூறிக் கொள்வர். நீங்கள் பயமுறுத்த வேண்டாம்.

3 முடியாது, கடினம், தோல்வி, நஷ்டம் என்பது போல எப்போதும் கர்ப்பிணி முன்பு பேச வேண்டாம். கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறான வார்த்தைகளை மட்டுமே கேட்கும் போது, குழந்தையின் குணாதிசயங்கள் மாறுபட வாய்ப்பிருக்கிறது.

4 வயிறு பெரிதாய் இருந்தால் ஆண், இல்லையென்றால் பெண் என நீங்களாக எதையும் கொளுத்தி போட வேண்டாம். இது போன்ற ஆசைகள் அதிகரித்து, பிறகு வேறு குழந்தை பிறக்கும் போது மனதளவில் பெண் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.

5 சாப்பாடு விஷயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கா, பரவலா கொஞ்ச நாள் தான் என கூறி, அவர்களது ஏக்கத்தை அதிகரிக்க வேண்டாம். இதுவும் கர்ப்பிணி பெண்களின் மனதை பாதிக்கவல்லது.

கர்ப்பிணி பெண்கள் கேட்க கூடியவை

1 அவர்களிடம் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் விதமாக பேச வேண்டும்.

2 குழந்தையிடம் நேரம் செலவழித்து பேச சொல்லுங்கள். மனதிற்கு இதமான பாடல்களை கேட்க சொல்லலாம்.

3 நல்ல புத்தகங்களை படிக்கச் சொல்லலாம். அதனால் குழந்தைக்கும் அது புரிய ஆரம்பிக்கும்.

4 கர்ப்பகாலத்தில் அவர்களது முகம் மிகவும் பிரகாசமாகவும், அழகாகவும் இருப்பதாக சொல்லலாம்.

5 பிரசவம் என்பது வாழ்வின் முக்கியமான பகுதி, வாழ்வின் மகிழ்ச்சியை அளிக்க கூடியது. அதை கண்டு பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லலாம்.

6 சில சுவாமி மந்திரங்கள், மனதை மகிழ்விக்கும் வாசகங்கள் மற்றும் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும் வாசகங்கள் போன்றவற்றை தினமும் சொல்ல சொல்லலாம்.

எப்போதும் எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்காத படி பேச வேண்டும். அவர்களை பயமுறுத்த கூடாது. மிகவும் பாசத்துடன் அணுக வேண்டும். அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon