Link copied!
Sign in / Sign up
55
Shares

கர்ப்பத்திற்கு பின் உடலுறவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

பெரும்பாலும், பெண்கள் கருத்தரிப்பிற்கு பின் உடலுறவை எதிர்க்க முயற்சி செய்கிறார்கள், ஏனெனில் அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் பெண்களே! உங்கள் கவலைகளை தூக்கி எறியுங்கள், ஏனென்றால், கர்ப்ப காலத்தில் கூட உடலுறவு சாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நீங்கள் கர்ப்பகாலத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, ஆனால் ஞாபத்தில் கொள்ள வேண்டியது, எப்போதும் நல்ல சிந்தனையுடன் கவனமாக இருக்க வேண்டும் என்பதே. கர்ப்ப காலத்தில் உடலுறவு பற்றி, எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை நாங்கள் இங்கு பட்டியலிட்டிருக்கிறோம்.

1 கர்ப்ப காலத்தில் உடலுறவு மிகவும் பாதுகாப்பானது

உங்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகும், நீங்கள் உங்கள் உடலுறவை தொடரலாம். இது முற்றிலும் சாதாரணமான ஒன்று. உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் துணைக்கு அதிக உணர்ச்சிகளுடனும், பதிலளிக்க கூடியவராகவும் இருந்தால், அது உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

2 உடலுறவு குழந்தையை பாதிக்காது

உடலுறவு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் நம்புவதால், தம்பதிகள் உடலுறவு கொள்வதிலிருந்து விலகிவிடுகிறார்கள். குழந்தையின் உடல் பல அடுக்குகளால் பாதுகாக்கப்படுகிறது. எனவே, அது உடலுறவின் போது குழந்தையை தொந்தரவு செய்யாது என்பது அறிவியல் கூற்று. அதனால் அந்த சிறிய தருணங்களை உங்கள் துணையுடன், மென்மையாக, இனிமையாக அனுபவியுங்கள்.

3 உடலுறவு நிலைகளை கவனத்தில் கொள்ளுதல்

கர்ப்ப கால உடலுறவில், உடலுறவு நிலைகளில் கவனம் கொள்ளுதல் எப்போதும் அவசியம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, உங்கள் வயிற்றில் அல்லது உங்கள் உடலின் எடையைக் காட்டிலும் அதிகமான எடையை பெற முடியாது (ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு). கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் சில நிலைகள் நன்றாக இருக்கும், ஆனால் அது 16-20 வாரங்களுக்கு பிறகு தவிர்த்து கொள்வது நலம். எனினும், கர்ப்ப காலம் முழுவதும் அனுபவிக்க கூடிய, மற்ற நிலைகளும் உள்ளன.

4 பாதுகாப்புறைகள்

உடலுறவின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்ப்பதற்காக, எப்போதும் பாதுகாப்புறைகளை பயன்படுத்துவது நல்லது. ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் பிறப்பு குறைபாடுகளுடன் தொடர்புடையது. இது உங்கள் உடலுறவு முறைகளால் பாதிப்பை ஏற்படுத்த கூடியவை. எனவே, முடிந்தவரை பாதுகாப்புறைகளை உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

5 உடலுறவின் பின் இரத்தப்போக்கு சாதாரணமான ஒன்றல்ல

உடலுறவு நேரத்தில் உடலில் சில பிடிப்புகள் ஏற்படுவது பற்றி கவலைப்பட ஒன்று இல்லை. இது மிகவும் சாதாரணமான ஒன்று. நீங்கள் இதிலிருந்து சில நிமிடங்களுக்கு வெளிவர முடியவில்லை என்றால் அதை பற்றி கவலை பட வேண்டியதில்லை. ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு உங்கள் பிறப்புறுப்பில் இரத்தம் காணப்பட்டால் அது சாதாரண விஷயம் அல்ல. நீங்கள் இதை உடனே உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும்.

நீங்கள் உடலுறவில் அதிக ஆர்வம் இல்லாமல் இருப்பது, மிகவும் சாதாரணமான ஒன்று. கர்ப்பகாலத்தில் உங்களுக்கு உடலுறவு வேண்டாம் என்பதை போல் நீங்கள் உணரலாம். அதைப் பற்றி நீங்கள் தவறாக நினைப்பதை , உங்கள் துணைக்கு தெரிவியுங்கள். குழந்தை பிறப்பிற்கு பிறகு நீங்கள் எப்பொழுதும் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும், மேலும் நீங்கள் வசதியாகவும் உணரலாம்.

உங்கள் துணையுடன் ஒரு ஆரோக்கியமான உடலுறவை பராமரிக்க வேண்டியது, உங்கள் திருமண வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. உங்களது கர்ப்பகாலம் எனும் சில காரணங்களுக்காக அது பாதிக்க பட வேண்டாம். எனினும், கர்ப்பத்தின் கடைசி வாரத்தில் (உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் தவிர) உடலுறவை தவிர்க்கவும். இல்லை என்றால், உங்கள் துணையுடன் நெருக்கமாக செல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பெண்களே! உங்கள் இனிமையான கருத்தரிப்பு காலத்தை பாதுகாப்புடன் கையாளுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon