Link copied!
Sign in / Sign up
20
Shares

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா..?

புதிதாக திருமணம் ஆனவர்களின் தாம்பத்திய வாழ்வை வெளி உலகிற்கு பறை சாற்றுவது, அவர்களின் குழந்தை உருவாகி இருப்பது தான். அப்படி தாம்பத்தியத்தின் மூலம் உருவான குழந்தை உங்கள் தாம்பத்திய வாழ்விற்கு இடைவெளி கொடுத்துவிடுமோ என்பது தான் பெரும்பாலான தம்பதிகளின் சந்தேகமாக உள்ளது. அவர்களின் வினாக்களுக்கான மருத்துவரின் விடைகளை இங்கு பார்க்கலாம்.

1 கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதா?

உங்கள் கர்ப்பப்பை தான் உங்கள் உடலிலே கடினமான தசைகளாலானது. நீங்களே நினைத்தாலும் உங்கள் கருவிற்கு ஆபத்தை விளைவிக்க முடியாது. இயற்கை உருவாக்கிய உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பான இடம் உங்கள் கருவறை தான்.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பொழுது உடலுறவு கொள்வது பாதுகாப்பானதே. அது சற்று சிக்கலான கர்ப்பம் என்றால் மருத்துவர் உடலுறவை தவிர்க்குமாறு அறிவுறுத்துவார். உங்கள் கர்ப்பம் சிக்கல் இல்லாத ஒன்றாக இருந்தால், உங்கள் பிரசவம் வரை உடலுறவு பாதுகாப்பானதே.

உங்கள் கரு இருக்கும் இடத்தை போன்ற பாதுகாப்பான இடத்தை இன்றுள்ள அறிவியல் விஞ்ஞானத்தினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இயற்கை ஆச்சரியங்களில் ஒன்று.

2 எப்போது உடலுறவு கூடாது

உங்கள் கர்ப்பம் சிக்கலானதாக இருந்தால் அப்போது பிரசவத்தில் சிக்கல் உண்டாகலாம். இந்த நிலை தாய் அல்லது சேயின் நிலையால் ஏற்படலாம். இந்த சமயங்களில் மருத்துவர் உடலுறவை தவிர்க்க அறிவுறுத்துவார்.

சிக்கலான கர்ப்பம் என்று எப்போது கூறுவார்கள் என்றால்

1. உங்கள் முதல் பிரசவம் சிக்கலாக இருந்திருந்தால்

2. ஏற்கனவே கருச்சிதைவு ஆகியிருந்தால்

3. செயற்கை முறையில் கருத்தரித்திருந்தால்

4. கர்ப்பத்தின் போது ரத்தப்போக்கு இருந்தால்

5. கருத்தரித்த பின் இரத்த கொதிப்பு, உடலில் வீக்கம் ஆகியவை ஏற்பட்டிருந்தால்

6. கர்ப்பமான பின் சர்க்கரை வியாதி வந்திருந்தால்

7. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை சுமந்தால்

8. உங்களின் நஞ்சுக்கொடி உங்கள் கர்ப்பப்பையின் வாயை அடைந்திருந்தால்

9. அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கருவில் ஏதாவது வித்தியசமாக தெரிந்தால்

10. உங்களுக்கு ஏதாவது நோய் இருந்தால்

3 கர்ப்பகாலத்தில் பாதுகாப்பான உடலுறவு நிலைகள்

1 பெண்களை மேலிருக்க செய்தல்

2 நாய் போல செய்தல்

 

3 ஒருக்களித்து படுத்து பின்புறமிருந்து செய்தல்

 

4 படுக்கையின் ஓரத்திலிருந்து செய்தல்

5 படுக்கையை பிடித்து குனிந்து நின்று செய்தல் 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon