Link copied!
Sign in / Sign up
6
Shares

கர்ப்ப காலத்தில் உங்கள் மார்பகத்தை பற்றிய 7 அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள்

நீங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள். அது எவ்வளவு அற்புதமான தருணம்! என நீங்கள் நினைப்பீர்கள், என்ன ஒரு அதிசயம்! ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் உடலில் சில பெரிய மாற்றங்கள் சிறிய காலத்திலேயே நடந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம். இது போன்ற சில மாற்றங்களை நீங்கள் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். அதிலும் முக்கியமாக பெண்களின் புனிதமான பகுதிகளை பற்றி கவலைப்படுவீர்கள். ஆம், உங்கள் மார்பகங்கள்! அவைகள் சில கடுமையான மாற்றங்களை சந்திக்கிறன. கர்ப்ப காலத்தில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் 7 விஷயங்களை இங்கு பார்ப்போம்.

1 பெரியது எப்போதும் நல்லது அல்ல

உங்கள் மார்பகங்கள் மிக பெரியவையாக மாறும். உங்களது கப் அளவு அல்லது இரண்டின் அளவும் அதிகரிக்கும். நீங்கள் 6 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும்போது இந்த மாற்றங்களைக் கவனிப்பீர்கள். இந்த மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவையாக இருக்காது. இப்படி மார்பகங்கள் அதிகரிப்பது, உங்களுக்கு முதுகு வழியை ஏற்படுத்தலாம். நீங்கள் அவற்றை நினைத்து கவலை அடைவதோடு , சுருங்க வேண்டும் எனவும் நினைப்பீர்கள். ஆனால் அவை தோல் உதிர்வதைப் போல் அரிக்க துவங்கிவிடும். நீங்கள் அம்மாவாக போகிறீர்கள் என்பதை, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வரித்தழும்புகள் உணர்த்தும்.

2 அந்நியப்படுத்தப்படும் கருமை

உங்கள் மார்பகக்காம்புகளும் உங்கள் கர்ப்பகாலத்தில் பெரிதாக்கப்படும். இதன் கருமை நிறமும் கூட அதிகமாக இருக்கும். இது குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பாலை அருந்த உதவுகிறது. இது உங்களுக்கு மிகவும் வினோதமானதாக தோன்றும். ஆனால் இது அம்மாவாக போகும் உங்களுக்கு இது உதவுகிறது. நீங்கள் உங்கள் மார்பு தோலின் கீழ் நரம்புகளை பார்த்து பயப்பட வேண்டியதில்லை. உங்கள் சிறு குழந்தைக்கான மாற்றங்கள் இவை என்பதை உணருங்கள்.

3 ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்

உங்கள் மார்பகக்காம்புகளில் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு ஏதுவாக மாற்றங்கள் அடையும். இவை சிறியவையாக மற்றும் வெளிப்படையாக தெரியும் படி இருக்கும். நீங்கள் அவைகளை பார்க்க முடியும். ஆமாம், இவை எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறிய சுரப்பிகள், இது போன்றவற்றை நீங்கள் கேட்டிருக்க கூட மாட்டீர்கள். ஆனால் நீங்கள் எப்பொழுதும் கர்ப்பகாலத்தில் உணர்வீர்கள்.

4 கசிவுகள் நேசிக்கப்படுவதில்லை

உங்கள் கர்ப்பத்தின் 3 வது மாதத்திற்குள், உங்கள் மார்பகங்கள் ஒரு ஒட்டும் மஞ்சள் திரவம், சீம்பால் உற்பத்தி செய்யும். அது நற்குணத்தால் நிறைந்திருக்கிறது, அது உங்கள் சிறிய குழந்தையின் தேவைக்காக இப்போதிலிருந்தே உருவாகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் உங்கள் ப்ராவுக்குள் சிறிய அளவில் இவை கசிய தொடங்கிவிடும். அது உங்களை தொந்தரவு செய்வதோடு, எரிச்சலைடையவும் செய்யும். ஒரு குழந்தையை பிரசவிப்பது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் உங்கள் வாழ்வின் அர்த்தத்திற்காக நீங்கள் இவற்றை கடந்துதான் ஆக வேண்டும்.

5 மென்மையாக

உங்கள் மார்பகங்கள் பெரும்பாலும் புண்ணாகவும் மற்றும் மென்மையாக உணர்கின்றன. இது பெரும்பாலும் கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களிலும் ஏற்படுகிறது. உயிர்களைக் கொடுப்பதற்காக நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள் என நீங்கள் உணரலாம் அல்லது அதுபோல் தோன்றலாம், ஆனாலும் இது அனைவருக்கும் பொதுவானது. இதற்கென நீங்கள் கவலையடைய தேவையில்லை, பல வீட்டு வைத்திய முறைகளும், அதிகளவில் மருந்து பொருட்களும் இதற்கு உண்டு.

6 சீரற்ற அளவுகள்

ஆமாம், இரண்டு மார்புகளும் எப்போதும் ஒரே அளவில் இருப்பதில்லை. ஆனால் கர்ப்ப காலத்தில் ஒரு மார்பின் அளவு மற்றொன்றை விட வேறுபாடு அதிகமாக இருக்கும். உங்கள் குழந்தையின் காதில் ஏற்படும் தொற்றின் காரணமாக, ஏதாவது ஒன்றில் மட்டும் உங்கள் குழந்தை பால் அருந்தலாம், ஆனால் இது பால் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம், இதெற்கு நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தைக்கு சிறிய மார்பகத்திலேயே பால் கொடுக்க வேண்டும். ஆனால் இது தான் இதற்கு சரியான வழியாக அமையும்.

7 கட்டிகள்

உங்கள் மார்பில் பல்வேறு இடங்களில் கட்டிகள் தோன்றலாம். இது உங்கள் குழந்தை சரியாக பால் குடிக்காததால் ஏற்படுவது. இது உங்களுக்கு தண்டனையாக கூட தோன்றலாம். உங்கள் குழந்தை முழு உணவையும் எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இந்த வேதனையான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு அதிகப்படியானவற்றை நீங்களே வெளியேற்றவும்.

ஆமாம், இது கடினமான ஒன்று தான். இது வலியாகவும், தண்டனையாகவும் தோன்றலாம். ஆனால் நீங்கள் அம்மாவாக ஒரு உயிரை உருவாக்கி, அதை பிரசவித்து புதிய வாழ்க்கையை கொடுத்து, உங்கள் வாழ்வின் அர்த்தத்தை பெறுகிறீர்கள். உங்கள் குழந்தை புன்னகைத்து சிரித்தால், அனைத்து துன்பங்களும் கனப்பொழுதில் காணாமல் போய்விடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon