Link copied!
Sign in / Sign up
6
Shares

கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் பிரச்சனையா? உங்களுக்கு இரத்தசோகையாக கூட இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை மிகவும் சாதாரணமானது. இது இரத்த சிவப்பணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் உடலில் குறிப்பிட்ட அளவு இரத்த சிவப்பணுக்கள் இருக்கும். ஆனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது. இரத்த சிவப்பணு எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் குறைந்தால், இரத்த சோகை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும்போது, நுரையீரல்களிலிருந்து உடல் திசுக்கு ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் ஆக்ஸிஜன் மாற்றப்படுவது கடுமையாக குறைகிறது. 

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படுவதற்கு ஆதாரமாக இருக்கும் அறிகுறிகள்:

தலைச்சுற்று

தலைவலிகள்

சுவாசத்தில் சிரமம்

ஒழுங்கற்ற இதய துடிப்பு

வெளிறிய தோல்

மார்பு வலி

கருத்தரித்து குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களில் பெரும்பாலானோர், அதிக வீரியம் மிக்க மருந்துகளை தவிர்க்கின்றனர். எனினும், இரத்த சோகையை கட்டுப்படுத்த அல்லது குறைக்க சில வழிகள் உள்ளன. உங்கள் உணவை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் எளிதாக இதிலிருந்து விடுபட முடியும். அவை என்ன உணவுகள் என்பதை பார்ப்போம்.

1 வைட்டமின் சி

வைட்டமின் சி நிறைந்த உணவு பொருட்கள் இரத்த சோகையை தவிர்க்கின்றன. நீங்கள் உங்கள் குழந்தையை பிரசவித்த பின்னரும், உங்களுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது. மேலும் வைட்டமின் சி அவை மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைகின்றன. ஆரஞ்சு, ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கிவி, கொய்யா பழம், நெல்லிக்காய் மற்றும் முட்டை கோஸ் போன்றவற்றில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவற்றை எடுத்து கொள்வதன் மூலம் இரத்த சோகையை தவிர்க்கலாம்.

2 இரும்புச் சத்து நிறைந்த உணவு

அதிக அளவில் இருப்பு சத்து நிறைந்த உணவுகள், இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்யும். கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த சோகையை தடுக்கவும், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. பருப்புகள், விதைகள், பயறுகள், பீன்ஸ், முட்டை, கோழி, சிவப்பு இறைச்சி மற்றும் கரும் பச்சை இலை காய்கறிகள் ஆகியவை இரத்த சோகையை உங்களிடம் இருந்து விலகி வைக்கும் உணவு பொருட்களாகும்.

3 பால் பொருட்கள்

நீங்கள் உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது, பால் பொருட்களில் அதிக அளவு இருப்பு சத்துக்கள் இருப்பதால் குறைத்து கொள்வது சிறந்தது. மிகவும் மோசமான இரும்பு சத்து உருவாக்க காரணிகள் பால் பொருட்களில் கலக்கப்படுகின்றன. உங்களது காப்பி மற்றும் டீ ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பாலிலும் இதே காரணிகள் காணப்படுகின்றன. இவற்றை தவிர்த்து கொள்வதே சிறந்தது. இயற்கையான முறையில் கிடைக்கும் பாலை பயன்படுத்தலாம்.

இயற்கையாக கிடைக்க கூடிய உணவுகளை உட்கொண்டு இரத்த சோகையை கர்ப்ப காலத்தில் உங்களிடமிருந்து விரட்டியடித்து, உங்களையும் உங்கள் குழந்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon