Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பகாலத்தில் வாயுத்தொல்லையை குறைக்கும் 5 உணவுகள்

கர்ப்பகாலத்தில் வாயு தொல்லை உள்ளதா? கவலைப்படாதீர்கள். இது மிகவும் சாதாரணமானது தான். புரோஜெஸ்ட்டிரோனின் வெளியீட்டின் காரணமாக, அது உங்கள் உடலில் உள்ள தசைகளை தளர்த்துகிறது. உங்களின் குடல் உட்பட. நீ மெதுவாக மென்று சாப்பிடுவதன் மூலமும், பழங்கள் மற்றும் பிற வாயுவை-தூண்டும் உணவைத் தவிர்ப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். வாயுத்தொல்லையை தவிர்க்கும் சில உணவுகளை இங்கு பார்க்கலாம்.

1 நீர்

இது நாள் முழுவதும் உடலில் திரவங்களைத் நிலைநிறுத்த உதவுகிறது. நீரை மிக விரைவாக விழுங்குவதும், வாயுக் கோளாறை ஏற்படுத்தும். தண்ணீர், தேநீர், காபி அல்லது சூப் என எதாவது ஒரு முறையில் நீரை குடிக்கவும். இந்த திரவங்கள் செரிமானதிற்கு உதவுகிறது. இதனால், வீக்கம் மற்றும் வாயுதொல்லையை குறைக்கிறது. நீங்கள் பழச்சாறுகளை நிறைய குடித்தால், அதை ஸ்ட்ரா கொண்டு குடிப்பதை தவிர்க்கவும். வாயுவை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பு பானங்களுக்கு பதிலாக தண்ணீர் எப்போதுமே சிறந்த தேர்வு.

2 ஓட்ஸ்

ஓட்ஸ் செரிமானத்திற்கு உதவும் அதிகளவு நார்சத்துக்களை கொண்டுள்ளது. நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கங்களை பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தவிர்ப்பதன் மூலம் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்கலாம்.

3 ஆளி விதை

கையளவு ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது குடல் இயக்கங்களை வழக்கம்போல் பராமரிக்க உதவுகிறது. இதனை அதிகளவில் எடுத்துக்கொள்வது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம். இது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லையை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதனை சாலட் அல்லது சாண்ட்விச்சுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

4 புதினா

புதினா எண்ணெய் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனை தேநீராக குடித்தாலும் சரி, அல்லது இரண்டு சொட்டுகள் நீரில் கலந்து குடித்தாலும் சரி, உங்களின் வாயுத்தொல்லை நொடியில் மறையும் அதிசயத்தை பார்க்கலாம்.

5 செவ்வந்தி

செவ்வந்தி செரிமான கோளாறுகளை எளிதில் குணமாக்கும். இது கொழுப்பை உடைத்து, நச்சுகளை அகற்ற உதவுகிறது. வாயுத்தொல்லை மற்றும் வீக்கத்தை சரிசெய்வதோடு புண்களையும் குணமாக்கும். செவ்வந்தி தேநீரை குடித்துவிட்டு 15 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பது அற்புத பலன்களை அளிக்கும். இதனை தினமும் குடித்து வருவது உங்களின் செரிமான கோளாறுகளை குணமாக்கும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon