Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய செய்யக் கூடாத 5 விஷயங்கள்

கர்ப்பகாலத்தில் தாய் குழந்தையை எதிர்பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருப்பாள். எனினும், குழந்தை இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்னர் அதற்கு ஒரு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டியது பெற்றோரின்  கடமை. உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத சில விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

1 உடற்பயிற்சி

ஒரு காலத்தில், உங்களின் இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 140 மேல் இருந்தால், குழந்தையின் உடல் சூட்டை அதிகரிக்கும் என நம்பப்பட்டது. அதனால், கர்ப்பிணிகள் வேலை செய்யவே மாட்டார்கள். ஆனால் இன்றோ, மருத்துவர்கள் கர்ப்பிணிகள் உடற்பயிற்சி, குறிப்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். இது தாய் மற்றும் சேய் இருவரின் உடல் நலத்திற்கும் நல்லது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசை பயிற்சி, தூக்கமின்மை போன்றவற்றிக்கு இது ஒரு சிறந்த நிவாரணம் ஆகும்.

2 புகைபிடித்தல் மது அருந்துதல்

இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. கர்ப்ப காலத்தில் புகை பிடித்தல், மது அருந்துதல் என இருந்தால், அது குழந்தையை பாதிக்கும். குழந்தைகள் உடல் ஊனமுற்றோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டோ பிறக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடுகள், நடத்தை பிரச்சனைகள், குறைவான பிறப்பு எடை மற்றும் போதிய வளர்ச்சி இல்லாமை ஆகியவை ஏற்படும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை கைவிட வேண்டுமெனில், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

3 அதிக காஃபின்

காஃபின் நஞ்சுக்கொடியின் வழியாக குழந்தைக்குள் ஊடுருவி, குழந்தையின் இதய துடிப்பை பாதிக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். எந்த அளவுக்கு அதிகமாக காஃபின் உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்காக நீங்கள் முற்றிலுமாக காஃபினை தவிர்க்க வேண்டும் என்றில்லை. ஒரு நாளைக்கு 200மிலி குறைவாக பருக வேண்டும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், தவறுதலாக நீங்கள் அதிகளவு காஃபின் உட்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

4 உடலுறவு

எப்போது வரை உங்கள் மருத்துவர், உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறாரோ அது வரை வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. எதற்கும் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

5 பூனையின் கழிவு

இது சற்றே விசித்திரமாக இருக்கலாம். இது பலருக்கும் தெரியாத ஒன்று. உங்களிடம் பூனை இருந்தால் அதன் கழிவுகளை நீங்கள் சுத்தம் செய்ய கூடாது. ஏனெனில், அதில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளது. குறிப்பாக, டோக்ஸோபிளாஸ்மா கான்டி என்ற ஒட்டுண்ணி ஒன்று உள்ளது. உடல் உபாதைகள் தீவிரமாகும் வரை, உங்களுக்கு அதனால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது. இதனால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon