Link copied!
Sign in / Sign up
164
Shares

கர்ப்பகாலத்தில் பெண்கள் அழுதால் என்னவாகும் என்று தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென கூறுவார்கள். ஏனென்றால் அந்த தருணத்தில் பெண்கள் பலவிதமான மனநிலைகளுக்கு மனதளவிலும், உடலளவிலும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சில சமயம் அதிக மகிழ்ச்சியாகவும், சில சமயம் கோபமாகவும், சோகமாகவும் காணப்படுவார்கள். சில பெண்கள் அதிகளவில் அழுவார்கள், அழுதுகொண்டே இருப்பார்கள் காரணம் அவர்கள் அதிக உணர்ச்சிவசபடுவதாலாகும்.

மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால் எந்த சூழ்நிலையானாலும் மகிழ்ச்சியாய் இருப்பதை தவிர்க்க கூடாது என்பதாகும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாகும். ஆனால் கர்ப்ப காலத்தில் அழுவது அம்மாவின் ஆரோக்கியத்தை காட்டிலும் குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும் என்பது தெரியுமா?

1 நீங்கள் உங்களுடைய தைரியத்தை இழந்து அழும்போது, அது உங்கள் குழந்தையை பெரிதும் பாதிக்கும். நீங்கள் அழுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். முக்கியமாக உங்களது சிறிய செல்லக்குழந்தை விரும்ப மாட்டார்கள். நீங்கள் அழுதால், அவர்களும் அழுவார்கள்.

2 ஆய்வுகளின் முடிவுகளின்படி கர்ப்பகாலத்தில் அதிக மனஅழுத்ததில் உள்ள பெண்களுக்கும், அதிகம் அழக்கூடிய பெண்களுக்கும் குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

3 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அதிகம் அழுவதற்கான காரணம், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். கர்ப்பகாலத்தில் அழுவது உங்கள் கருப்பையில் வளரும் குழந்தையை பெரிய அளவில் தொந்தரவு செய்யும். ஆனால், கர்ப்பகாலத்தில் திடீரென்று மனநிலை மாறுவது, சோகமாக உணர்வது இயற்கையானது தான்.

4 எனவே கர்ப்ப காலத்தில் நீங்கள் அழுவது போலவோ அல்லது மனஅழுத்தத்தை உணர ஆரம்பித்தாலோ, அந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களது கவனத்தை மகிழ்ச்சியான விஷயங்களை நோக்கி திருப்புங்கள். அது உங்களது குழந்தை பற்றியோ அல்லது உங்களுக்கு பிடித்தமான உணவுகளை பற்றியோ இருக்கலாம்.

5 நீங்கள் வீட்டில் தனியாக இருந்தால் நீங்கள் ஆர்வமின்றியோ அல்லது ஏதாவது தொந்தரவு செய்வது போலவோ உணர்ந்தால், நீங்கள் உங்களுக்கு பிடித்த நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அழையுங்கள். அவர்களிடம் பேசுங்கள். இது உங்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

6 இது தவிர, நீங்கள் வெளியே சென்று உங்கள் பிடித்த படம் பார்க்கலாம். இது தவிர, நீங்கள் சில புத்தகங்களைப் படிக்கலாம்.

இந்த குறிப்புகள் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான கர்ப்ப காலத்தை கழிக்க உதவும் என்று நம்புகிறோம்!

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon