Link copied!
Sign in / Sign up
6
Shares

இந்த 7 காய்களை கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டும். குழந்தைக்கு நல்லது!

கர்ப்பகாலம் பெண்களுக்கு மகிழ்ச்சியையும், சில துன்பங்களையும் கொடுத்தாலும் அது அவர்களின் மகிழ்ச்சி காலமாகவே இருக்கும். கர்ப்பகாலத்தில் அவர்கள் என்ன தான் விரும்பியதை சாப்பிட்டாலும், ஆரோக்கியமானதாக சாப்பிட வேண்டியது அவசியம். கர்ப்பகாலத்தில் குழந்தைக்கும் சேர்த்து என அதிகமாக சாப்பிடாமல், 200 கலோரிகள் அதிகமாக சாப்பிடாலே போதுமானதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும் படியான உணவுகளை  சாப்பிட வேண்டும். இங்கு கர்ப்பகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 காய்கள் பற்றி பார்க்கலாம். 

1 முட்டை கோஸ்

இதில் வைட்டமின் கே, ஈ மற்றும் ஏ போன்றவை அதிகம் நிறைந்திருக்கின்றன. மேலும் மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் போன்ற குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதை கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.

2 பட்டாணி

பட்டாணியில் வைட்டமின் கே அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் நரம்பியல் மண்டலம், தசை மற்றும் எலும்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை உங்கள் விருப்படி சமைத்து சாப்பிடலாம்.

3 தக்காளி

தக்காளியில் அதிக அளவில் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது கர்ப்பிணிகளின் உடலில் புதிய இரத்தத்தை உருவாக்குவதுடன், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இதில் உள்ள லைகோபைன் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

4 கீரைகள்

கீரைகள் எப்போதும் ஆரோக்கியமான உணவில் சேரும். அனைத்து கீரைகளையும் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. இதில் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஜிங்க் இதில் நிறைந்திருக்கிறது. குறிப்பாக எளிதில் கிடைக்க கூடிய பசலை கீரை மற்றும் வெந்தய கீரையில் மாங்கனீசு, நார்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

5 பீட்ரூட்

பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதை கர்ப்பகாலத்தில் எடுத்து கொள்வதால் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

6 சர்க்கரை வள்ளி கிழங்கு

இதில் நார் சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இதில் இருக்கும் நார்சத்து கர்ப்பிணிகளின் மலச்சிக்கலுக்கும் பெரிதும் உதவியுமாக இருக்கும்.

7 ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இதை கர்ப்பிணிகள் தவிர்க்காமல் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon