Link copied!
Sign in / Sign up
34
Shares

கர்ப்பகாலத்தில் உடல் உறுப்புகளின் நகர்வு எப்படி இருக்கும் - வீடியோ

குழந்தையை கருவில் வைத்து பாதுகாக்கும் போது, அதன் வளர்ச்சியில் மட்டும் மாற்றம் அடைவதில்லை. உங்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அவை அனைத்தும் வெளியில் தெரிவதில்லை. உங்களுக்கு தெரிவதெல்லாம் வயிறு பெரிதாவது, உங்கள் தோலில் ஏற்படும் வரித்தழும்பு, முகத்தின் பிரகாசம், முடியின் உதிரும் தன்மை குறைவு மற்றும் காலில் ஏற்படும் வீக்கம் மட்டுமே. குழந்தை வளர வளர தாயின் உள்றுப்புகளிலும் மாற்றம் ஏற்படும். உள்ளுறுப்புகள்  இடம் மாறும். இதை உங்களால் காண முடியாததால், நம்ப முடியாததாக இருக்கும். 

குழந்தை கருவில் வளர துவங்கியதும், உங்கள் உடல் உறுப்புகள் நகர்ந்து எப்படி குழந்தைக்கு இடமளிக்கும் என்பதை இந்த வீடியோ காட்டும்.

இந்த வீடியோ அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகம், சிகாகோவினால் உருவாக்கப்பட்டது. நீங்கள் அவர்களின் வலைத்தளத்தில் தேடினால், உண்மையில் கர்ப்பம் பற்றிய தகவல்களை பெறலாம்.

அற்புதமான உயிரை உருவாக்குவதற்காக அம்மாவின் உடல் உறுப்புகளில் அழுத்தம் ஏற்படும். இந்த சமயத்தில் உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்றாக நெருக்கமாக இருக்கும். நீங்கள் யோசித்ததுண்டா? கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏன் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை மற்றும் சிறுநீர் பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது என்று. யாரோ உங்கள் சிறுநீர்ப்பையைத் தொடர்ந்து அழுத்துவதை கற்பனை செய்து பாருங்கள், இது ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரத் தேவை ஏன் என்று விளக்கும்.

வாரங்கள் மாதமாக மாறி உங்கள் பிரசவ தேதி நெருங்கும் போது, தாயின் ஒவ்வொரு சிறிய உறுப்பும் மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கும். ஒரு பெண்ணின் உடல் பிரசவத்திற்கு பிறகு அதன் சாதாரண நிலைக்குச் செல்ல எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

கர்ப்பம் அசாதாரண சாதனையை விட குறைவானதல்ல. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட, நம் உடல்கள் உண்மையில் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குகிறது என்பது ஆச்சரியமமான ஒன்று. உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon