Link copied!
Sign in / Sign up
13
Shares

கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய மூச்சுபயிற்சி

கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மகிழ்ச்சி, மாற்றங்கள் மற்றும் இன்பமான வேதனையை தரக் கூடியதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் பெண்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை போன்றவற்றை பட்டியலிடப்பட்டிருக்கும். ஆனால் எதை எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் எனும் சந்தேகம் அவர்களுள் எழும். அதில் முக்கியமாக அனைவரும் சொல்லும் ஒன்று உடற்பயிற்சி. அதிலும் குறிப்பாக மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது அவசியம். கர்ப்பிணிகள் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். இங்கு கர்ப்பகாலத்தில் செய்ய கூடிய 4 மூச்சு பயிற்சி பற்றி பார்க்கலாம்.

பயிற்சி ஒன்று 

வெறும் தரையில் மூச்சு பயிற்சி செய்வதை தவிர்த்து, ஏதேனும் ஒரு துணியை தரையில் விரித்து கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு தாடை, தோள்கள், இடுப்பை தளர்த்தி ஒரு கையை வயிற்றிலும், மற்றொரு கையை அந்த கையின் மீதும் வையுங்கள். பின் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணுங்கள். பின்னர் மெதுவாக மூச்சை வெளியில் எடுத்துவிடுங்கள். இதை தொடர்ந்து செய்யவும். இந்த பயிற்சியை தினமும் பத்து நிமிடங்களுக்கு செய்யலாம்.

பயிற்சி இரண்டு 

கால் பாதங்களை இணைத்து வைத்து நேராக நின்று, வாயை திறக்காமல் மூச்சை நன்றாக இழுத்து பத்து வரை எண்ணவும். அப்போது கைகளால் அழுத்தாமல் மார்பின் மீது வைக்கவும். இப்போது நுரையீரல் விரிவடைவதை உணரமுடியும். சில நொடிகள் மூச்சை இழுத்து கொண்டிருந்துவிட்டு, மெதுவாக மூசை வெளியே விட்டு பத்து வரை எண்ணவும். இதே போல் இந்தப் பயிற்சியை தினமும் பத்து முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்கு பின் இப்பயிற்சியை செய்வது சிரமமாக இருந்தாலுமு் முடிந்த வரை செய்வது நல்லது.

பயிற்சி மூன்று 

முதுகு புறம் கீழே இருக்கும் மாறு படுத்துக்கொண்டு, வாயை நன்றாக திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்தால் நுரையீரலுக்கு நல்லது. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும். இதனால், குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

பயிற்சி நான்கு

உடலை தளர்வாக வைத்து மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஒரிரு நொடிகள் கழித்து அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயை திறந்து காற்றை இழுத்து விழுங்கி ஐந்து வரை எண்ணவும்.

பின் வாயை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விடவேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்த பயிற்சியைச் செய்யலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம் அல்லது வசதியாக அமர்ந்துகொண்டும் செய்யலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon