Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பகாலத்தில், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உங்களின் உடல் பல்வேறு மாற்றங்களை சந்திக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள், வீக்கம், தழும்புகள், தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி போன்றவையாகும். கர்ப்ப காலத்தை பற்றி கர்ப்பமான பெண்களுக்கு தான் நன்றாக தெரியும். குறிப்பாக உங்களுடைய கர்ப்பகாலம் பற்றி உங்களுக்கு தான் நன்றாக  தெரியும்.

ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களோ, அதிலும் குறிப்பாக ஆண்கள், நாம் கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை வரையறுக்க அவர்களுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். நீங்கள் சரியாக தான் நடத்தப்படுகிறீர்களா என்று நீங்கள் யோசித்ததுண்டா? இங்கே, கர்ப்ப காலத்தில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.

1 பேருந்து / இரயிலில் இடம் கேட்டல்

உங்களுக்குள் சுமார் 2-3 கிலோ எடையுள்ள ஒரு உயிரை நீங்கள் எங்கு சென்றாலும் சுமந்து செல்ல வேண்டும். இதனால், நீங்கள் உடல் சோர்வாலும் முதுகு வலியாலும் அவதிப்படுவீர்கள். எனவே, நீங்கள் பஸ் / ட்ரெயினில் பயணம் செய்யும் போது அமர்ந்து கொண்டு ஓய்வெடுத்தல் மிகவும் அவசியமான ஒன்று. உங்களுக்காக யாராவது இடமளித்தால் அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் நன்றி கூறிவிட்டு உட்கார்ந்துகொள்ளுங்கள். இது அவசியமான ஒன்று என்பதால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அதே போல் இடம் கேட்கவும் தயங்காதீர்கள்.

2 துரித உணவுகள்

கர்ப்ப காலத்தில் பல வகையான உணவுகளை ருசி பார்க்க தோன்றும். இது சகஜமான ஒன்றே. ஆனால், அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது எல்லா தாய்மார்களுக்கும் தெரியும். நாம் ஒரு சமோசா அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட்டால் நம்மை இந்த சமூகம் ஒரு மாதிரியாக தான் பார்க்கும். ஆனால், இதில் வருத்தப்படவோ அல்லது வெட்கப்படவோ எதுவும் இல்லை. என்றைக்காவது ஒருநாள் ஐஸ் கிரீம் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை. பால் பொருட்கள் உடலுக்கு நல்லது தானே.

3 கர்ப்பம் குறித்து பேசுவது

கர்ப்ப காலத்தில் உங்கள் நண்பர்களை சந்திக்கும் போது நீங்கள் உங்கள் கர்ப்பம் குறித்து தான் பேசுவீர்கள். காலை மயக்கம், வாந்தி, வலி, குழந்தையின் சின்ன சின்ன உதைகள், அல்ட்ராசவுண்ட், உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இதை அடிக்கடி கேட்கும் உங்கள் நண்பர்களுக்கு சலிப்பாக இருக்கும். அதனால் உங்களை அமைதியாக்கி விடுவார்கள். இதனால், அவர்களுக்கு உங்கள் மேல் அக்கறை இல்லை என்று பொருளில்லை. அவர்களால் அதை தொடர்புபடுத்தி பார்க்க முடியாததே இதற்கு காரணம். ஆனால், முன்னெச்சரிக்கையாக இந்த புலம்பல்கள் எல்லாம் குழந்தை பிறப்புக்கு பின் இன்னும் அதிகமாகும் என்பதை மட்டும் அவர்களிடம் சொல்லி விடுங்கள்.

4 மனநிலை

கர்ப்ப காலத்தில் உங்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் நன்றாக சிரித்துக்கொண்டு இருப்பீர்கள்; அடுத்த நிமிடம் கோபப்படுவீர்கள். இதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. சில சமயம், நீங்கள் சொல்ல கூடாது என்று நினைக்கும் ஒன்று கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது. கர்ப்பமாவதற்கு முன்பாக நீங்கள் இது போல் இருந்திருக்க மாட்டீர்கள். இவையனைத்தும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவே என்று உங்களுக்கு தெரியும். இது வெறும் சில காலங்களுக்கு மட்டும்தான் என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

5 உடை

சில நேரங்களில் நீங்கள் வெளியே இருக்கும் போது, உங்கள் வயிறு பெரிதாக இருக்கும் காரணத்தால் உடை விலகியிருக்கும். இது பொது இடங்களில் உங்களுக்கு தர்மசங்கடத்தை அளிக்கும். வேகமாக மூடி மறைக்க வேண்டியிருக்கும். ஆனால் இதில் அவமானப்பட எதுவும் இல்லை. கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உடைகளை கண்டுபிடிப்பதே மிக கடினமான காரியம். உங்களின் வயிறு அவ்வப்போது தெரிந்தால் இதில் அவமானப்பட எதுவும் எல்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

6 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றல்

உங்கள் நண்பர்கள், உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு, அவர்களை கவனித்துக்கொள்ள நேரம் சரியாக இருக்கும் என்பதால் எந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாது என்று உங்களை கிண்டல் செய்வார்கள். ஆனால், அதே சமயம் கர்ப்பகாலத்தில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். இதில், பாதி தன் உண்மை உள்ளது. குழந்தைகள் வந்த பிறகு உங்களுக்கு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள நேரம் இருக்காது எனினும். அதற்காக கர்ப்பமாக இருக்கும் போதே, உடம்பை வருத்திக்கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஏதாவது நிகழ்ச்சியில் இருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தோன்றினால் உடனே கிளம்பி விடுங்கள். உங்களையும் உங்கள் குழந்தையையும் கவனித்துக்கொள்ள நீங்கள் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon