Link copied!
Sign in / Sign up
6
Shares

கர்ப்பகாலத்தில் நன்றாக உறங்க அருமையான 6 வழிகள்

ஒரு குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வு ஒரு பெண்ணிற்கு, அவள் தாயாக போகிறாள் என்று தெரியும் போதே வந்துவிடுகிறது. அன்றிலிருந்து குழந்தையின் மீது உள்ள அன்பு அதிகரித்து கொண்டே இருக்கும். தன் குழந்தை சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய் தன்னால் முடிந்ததை செய்வாள். அதற்காக அவள் என்ன கஷ்டங்களை வேண்டுமானாலும் அனுபவிப்பாள். ஆனால், ஒரு தாய்க்கும் சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக தூங்கும்  பொழுது. கர்ப்பமான பெண் தான் படுக்கும் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். அது குழந்தையை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

கர்ப்பமான பெண்ணுக்கு தனது உடல்நலத்தையும், தனது குழந்தையின் உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. இங்கே, கர்ப்பமான பெண்கள் நன்றாக உறங்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 ஒரு பக்கமாக படுக்கவும்

தூங்குவதற்கான சிறந்த நிலைகளுள் ஒன்று ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பதாகும். இது தாய்க்கும் சேய்க்கும் சௌகரியமாக இருப்பதோடு, குழந்தைக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். இடதுபுறமாக திரும்பி படுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

2 உணவு

நீங்கள் சாப்பிடும் உணவிற்கும், உங்களின் தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பதால், புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். சாதம் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுவது இதற்கு உதவும். மேலும், மூன்று வேளை உணவிற்கு பதிலாக, சிறிது சிறிதாக பிரித்து பல வேளைகளாக உண்ணலாம்.

3 உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி செய்வதால், அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசைகளை வலுவாக்குகிறது. இது உங்களின் தூக்கத்திற்கு உதவும்.

4 குளியல்

தூங்குவதற்கு முன் சூடான நீரில் குளிப்பது இரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை தளர்த்துகிறது. இது இரவில் உங்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

5 தலையணை (உடலுக்கான தலையணை)

உடலுக்கான தலையணை உங்களை சௌகரியமான நிலையில் படுக்க உதவும். குறிப்பாக வயிற்றை அழுத்தும்படி படுக்கும் பெண்களுக்கு. பல வகையான உடல் தலையணைகள் சந்தையில் கிடைத்தாலும் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

6 நேரம்

தினசரி தூங்கும் நேரத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமாகும். இதனால், உங்கள் உடலும் அதற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும். ஆரம்பத்தில் சற்றே கடினமாக இருந்தாலும், விரைவில் உங்கள் உடலும் ஒத்துழைத்து, நல்ல தூக்கத்தை பெற முடியும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon