Link copied!
Sign in / Sign up
6
Shares

கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட உணவின் மணம் பிடிக்காமல் போவதற்கான காரணம்!

நீங்கள் முன்பே உங்கள் உணவுகளை வெறுக்க துவங்கிவிட்டீர்களா? கர்ப்பகாலத்தில் சில உணவுகளை சமைக்கும் போது அவற்றின் வாசனையால், அங்கு நிற்க முடியவில்லையா? இவை உங்கள் கர்ப்பகாலத்தில் சாதாரணமாக ஏற்பட கூடிய ஒன்று தான். அதிலும் குறிப்பாக உங்கள் முதல் மூன்று மாதங்களில் இது ஏற்படுகிறது. இதை பற்றி கவலை படுவதற்கு ஒன்றும் இல்லை.

இருப்பினும், இந்த மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பது மற்றும் அதை பற்றி தெரிந்து கொள்வது சிறந்தது. அதிலும் குறிப்பாக உடலின் மாற்றத்தால் ஏற்படும் அனுபவங்களையும், அதன் பின் இருக்கும் காரணங்களையும் அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். உங்களுக்கு ஏன் கருத்தரிப்பிற்கு பின் அந்த உணவின் மணம் பிடிக்காமல் போனது என்று பார்க்கலாம்.

மனித கோரியோனிக் கோனாடோட்ரோபின்(hCG) என்பதை பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த உணவின் மணம் கூட அருகில் நிற்க முடியாதபடி இருக்க, இந்த ஹார்மோன் தான் முக்கிய காரணம். உங்கள் கருப்பையில் கருமுட்டை கருவுற்ற பின், உங்கள் நஞ்சுக் கொடியால் இந்த hCG ஹார்மோ/ன் உற்பத்தி செய்யப்படுகிறது. உங்கள் சிறுநீர் அல்லது கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனையில் கர்ப்பத்தை கண்டறியவும், உறுதிப்படுத்தவும் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த ஹார்மோன் உங்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மற்றும் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இப்போது முதல் உங்கள் கர்ப்பகாலத்தின் 11 -வது மாதம் வரை, உங்கள் உடலில் இந்த hCG நிலையானது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இது உங்கள் முதல் மூன்று மாதங்களில் உச்ச நிலையை அடைகிறது. இந்த ஹார்மோன் நிலையில் ஏற்படும் மாற்றங்களே, குறிப்பிட்ட உணவை வெறுக்க செய்கிறது.

நீங்கள் இந்த ஹார்மோன் மாற்றத்தால் குமட்டல், வாந்தி அல்லது காலை நேர சோர்வு போன்றவற்றை உணரலாம். இறைச்சி, முட்டை மற்றும் காரமான உணவுகள் போன்றவற்றை கர்ப்பகாலத்தில் அடிக்கடி பெண்கள் தவிர்க்கிறார்கள்.

இன்னும் சில வகையான பெண்கள் உணவு பொருளில் சேராதவற்றை உண்ண விரும்புகிறார்கள். உதாரணமாக சுண்ணாம்பு கட்டி(சாக்பீஸ்), சாம்பல், முடி போன்றவைகளுக்கு ஏங்குவார்கள். இந்த நிலை மாறான உணவு ஆசை (pica) என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற உணர்வுகள் கர்ப்பகாலத்தின் எந்த நிலையில் உங்களுக்கு ஏற்பட்டால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

உங்கள் ஹார்மோன் மாற்றத்தால் பல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் இழப்பதாக உணர்ந்தால், அதற்கு மாற்றாக பச்சை காய்கறிகள், இறைச்சி அல்லது அதே சத்துக்கள் நிறைந்த வேறு உணவுகளை நீங்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon