Link copied!
Sign in / Sign up
11
Shares

கர்ப்பகாலத்தில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 7 தயாரிப்புகள்

கர்ப்பம் என்பது ஒரு அற்புதமான நிகழ்வாக இருந்தாலும், உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால், நீங்கள் பல அசௌகரியங்களை உணரலாம். அதாவது, உங்கள் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் ஏற்ப புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் கர்ப்பகால பயணத்தில், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில தயாரிப்புகள் உள்ளன. அவை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

1 தேய்த்து விடுதல் (லோஷன்)

உங்கள் கர்ப்பகாலத்தில் மிக முக்கியமான ஒரு குணாதிசயம், உங்கள் வயிறு பெரியதாவது தான். உங்கள் தோல் விரிவடைவதால், அடிக்கடி வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. இதனுடன், தோல் விரிவடைவதால் வரித்தழும்புகளை ஏற்படுத்துகிறது. இந்த அரிப்பு உங்களை அசௌகர்யமாக உணர செய்யும். மேலும் உங்களுக்கு வரித்தழும்புகள் ஏற்படாமல் இருக்க, உங்கள் உடலை நீரேற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். லோஷன்கள் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் இதை தவிர்க்க முடியும். தாவர எண்ணெய்கள் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக, பல அம்மாக்கள் தெரிவிக்கின்றன.

2 கர்ப்பகால கால் சட்டை(pant)

உங்கள் வயிறு விரிவடைந்திருப்பதால், உங்களால் உங்கள் பேண்ட்களை அணிய முடியாது. முன்பு, நீங்கள் மெல்லிய அழகான தோற்றத்துடன் இருந்திருக்கலாம், ஆனால் அவை எல்லாம் இப்போது பயனளிக்காத படி உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் பிரசவக்காலத்திற்கென கிடைக்கும் பேண்ட்களை வாங்கி உபயோகப்படுத்தினால், நன்கு வசதியாக உணரலாம். இதில் பிரசவ காலத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லெக்கின்ஸ், பேண்ட் மற்றும் ஜீன்ஸ் போகின்றவை அடங்கும். இதில் லெகின்ஸ் என்பது எல்லா சமயங்களிலும் அணிய முடியும். ஒரு லெக்கின்ஸ் உடன் வேறு வேறு ஆடைகளை ஜோடியாக அணியலாம். நீங்கள் லெக்கின்ஸ் அணிவது பேண்ட் அணிவதை விட மிகவும் வசதியாக உணர செய்யும்.

3 வயிற்று பட்டை

குழந்தையின் எடை கூடுவதால், வயிற்றினுள் ஏற்பாடும் மாற்றங்கள் காரணமாக, பெரும்பாலான பெண்கள் முதுகு வலி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றுக்கு போடப்படும் இந்த பட்டை வயிற்றின் எடையை தாங்குவதோடு, உங்களுக்கு அழகான தோற்றத்தையும் கொடுக்கிறது. உங்கள் குழந்தைக்கு உற்சாகத்தை ஏற்படுத்த சில அழுத்தங்களை விடுவிக்கும்.

4 பாப் டெம் மாத்திரைகள் (சப்ளிமெண்ட்ஸ்)

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, உங்கள் உணவு பழக்கம் கடுமையாக மாறும். உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதால், சில குறிப்பிட்ட உணவு வகைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். மேலும், உங்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் காரணமாக உங்களுக்கு பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாது. இந்த எதிர்மறை விளைவுகளால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் உங்கள் உடலின் பராமரிப்புக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். நீங்கள் எந்த ஊட்டச்சத்துகளைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி, கூடுதலாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறோம். எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் D, கொழுப்பு அமிலங்கள் மற்றும் மேலும் சிலவற்றை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறோம். இவற்றை இயற்கை முறையில் பெறுவது மிகவும் சிறந்ததாகும்.

5 மென்மையான ஷூகள்

நீங்கள் நாள் முழுவதும் உட்க்காந்திருப்பதை விரும்பாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் நபர் என்றால், உங்களுக்கு தேவையானது தான் இந்த மென்மையான காலணிகள். நீங்கள் நடக்கும் போது, உங்கள் உடலின் எடையை தாங்குவது கால்கள் தான். இதனால் உங்களுக்கு கால் வலி மற்றும் பாத வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவற்றை தடுக்க, உங்கள் கால்களுக்கு மென்மையான ஷூகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம். உங்கள் கால்களுக்கு மென்மையான மற்றும் அழகு தர கூடிய வடிவங்களில் வாங்கி பயன்படுத்துங்கள். நீங்கள் உங்கள் வீட்டினுள் குளிர்ச்சியை உணர்ந்தால், அதெற்கென மென்மையான செருப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

6 உடலுக்கான தலையணைகள்

BODY PILLOW

நீங்கள் தூங்கும்போது, உங்கள் பக்கவாட்டில் தூங்குவதாக இருக்கலாம், அல்லது உங்கள் வயிற்றில் மீது தூங்கிக் கொண்டிருக்கலாம். உங்கள் வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும்போது, உங்கள் பக்கவாட்டில் தூங்குவதை நீங்கள் அசௌகர்யமாக உணர்வீர்கள். உங்கள் வயிற்றின் மீது தூங்குவது, உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். நம்மில் பெரும்பாலானோர், முதுகு புறமாக தூங்குவதை தவிர்க்கிறோம். விலாவில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, மூச்சு திணர்வதாக உணரலாம். ஒரு உடல் தலையணை உங்கள் உடலை ஆதரிக்கும் வகையில் சரியான பகுதிகளை உயர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் இதை உபயோகிப்பதன் மூலம் வசதியாக உணர்வீர்கள்.

7 புதிய உள்ளாடைகள் (பிரா)

உடல் விகிதாச்சாரங்களில் மாற்றமடைவதால், உங்கள் மார்பின் அளவும் அதிகரித்திருக்கும். இருப்பினும், சிலர் மார்பக வளர்ச்சியை எதிர்கொள்கையில், மற்றவர்கள் தங்களை சிறியதாகக் கருதிக் கொள்வார்கள் என்பதைக் கவனியுங்கள். உங்கள் மார்பில் மூச்சு திணரலை தவிர்த்து, உங்களை வசதியாக உணர செய்ய புதிதாக புதிய அளவுகளில் வடிவமைக்க பட்ட பிராக்கள் கிடைக்கின்றன. அவைகள் வரவிருக்கும் மாதங்களில் நிறைய வேலைகளைச் செய்யப் போகிறார்கள், அதனால் அவைகளுக்கு அதிக கவனம் அளிக்கவும். நீங்கள் உங்களுக்கு பிடித்த வடிவங்களில், உங்களுக்கு பொருத்தமானதை வாங்கி அணிய துவங்குங்கள்.

இந்த சில பொருட்கள் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான கர்ப்பிணி பெண்ணாக பயணிக்க உதவும். இது உங்களுக்கு ஒரு வரம், ஆனால் எல்லா பெண்களுக்கும், குறிப்பாக கணவன் மற்றும் அம்மாவின் அன்பே பெரிதாக உணரப்படுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon