Link copied!
Sign in / Sign up
8
Shares

கர்ப்பகாலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்

கர்ப்பகால என்பது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய ஒன்று. மேலும் இந்த சமயத்தில் உங்களுக்கு மிகுந்த பசியும் ஏக்கங்களும் ஏற்படும். நீங்கள் எதிலும் எல்லாவற்றிலும் ஈடுபட வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் உங்களை வேண்டாம் என்று தடுக்கும் போது, மிகவும் வேதனைக்கு உள்ளாவீர்கள். துரதிருஷ்டவசமாக, நீங்கள் செய்யும் சிறிய செயலும் கூட, உங்களுக்குள் வளரும் உங்கள் குழந்தையை பாதிக்க கூடும். எனவே, கர்ப்பகாலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1 குடிப்பழக்கம்

மது இந்த பட்டியலில் முதல் இடத்தை பெறுகிறது. மது அருந்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. இவற்றை விரும்பும் தாய்மார்கள் மது சார்ந்த குடிபானங்களை தவிர்க்க வேண்டும். திரவமானது இரத்த ஓட்டத்தின் வழியாக கருவிற்கு செல்லும் மற்றும் உங்கள் குழந்தை மதுவில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களால் மிகவும் பாதிக்கப்படும். இது உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

2 புகைபிடித்தல்

இது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நிகோடின், கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற வேதிப்பொருட்களை நீங்கள் மட்டும் சுவாசிக்கவில்லை, உங்கள் குழந்தையும் இது அனைத்தையும் சுவாசிக்கும். உங்கள் குழந்தை குறை மாதத்தில் பிறப்பது, கருச்சிதைவு, நஞ்சுக்கொடி சுற்றி கொள்ளுதல் மற்றும் குழந்தை பிறந்த பின் திடீர் இறப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது, நீங்கள் புகைப்பிடிப்பதால். உங்களுக்கு உற்சாகமளிக்கும் புகைப்பழக்கம், அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3 போதை பொருட்கள்

எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது போதை மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த போதை பொருட்கள் உங்கள் பிரசவ நேரத்தையும், உங்கள் குழந்தையையும் மிகவும் பாதிக்கும். இது குறை பிரசவம் மற்றும் கருச்சிதைவை மட்டும் ஏற்படுத்தாமல், குழந்தை இறந்து பிறப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது. இந்த பழக்கங்கள் ஒரு குழந்தையை தாங்கக்கூடிய உடல் சக்தியை இழக்க செய்து விடும். எனவே, இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.

4 மன அழுத்தம்

நீங்கள் உங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது, குழந்தைக்கான மிக பெரிய பொறுப்பை ஏற்பதால், மன அழுத்தம் தானாக வந்துவிடும். எனினும், மன அழுத்தம் உங்கள் குழந்தையின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இப்போது நீங்கள் உங்களை அமைதியாக்க, தியானம் மற்றும் யோகா போன்றவற்றை முயற்சிக்கவும். மன அழுத்தம் தூக்கமின்மை மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம், கர்ப்ப காலம் என்பது உண்மையில் மிகவும் கடினமான கட்டமாகும். ஹார்மோன் மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

5 செல்ல பிராணிகள்

உங்கள் அன்பான செல்லப்பிராணிகளாலும் உங்கள் குழந்தை பாதிக்க படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது. பூனைகள் நேரடியாக தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அவற்றின் மலங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். டோக்ஸோபிளாஸ்மோசிஸ் என்பது பூனை மலம் வழியாக பரவுகின்ற ஒரு தொற்று ஆகும். ஊர்வன மற்றும் நீர்நில வாழ்விகள் சால்மோனெல்லா பாக்டீரியாவின் ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன. பறவைகள் கேம்பிலிபாக்டெர், க்ளமிலியோசிஸ், புரோட்டோஜோன் மற்றும் சால்மோனெல்லா போன்ற தொற்றுக்களை ஏற்படுத்தும்.

6 பூச்சி மருந்து

டெங்கு மற்றும் மலேரியா நோய் போன்ற நோய்களில் இருந்து தப்பிக்க கொசு மருந்தால் உங்களுக்கு உதவ முடியும் என்றாலும், அவை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் உங்கள் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறார்கள், இது கிட்டத்தட்ட அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, பூச்சி மருந்துகளிடமிருந்து விலகிச் செல்வது நல்லது, ஆபத்தான பூச்சிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

7 ஓடுதல்

நீங்கள் ஆரம்பத்திலிருந்து ஓடி கொண்டிருந்தால், நீங்கள் அதை தொடரலாம். அதுவும் உங்கள் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே. நீங்கள் உங்களது 3 - 6 மாதங்களில் இவற்றை தவிர்த்து கொள்ளவது சிறந்தது. இது உங்கள் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஓடும் போது கீழே விழுந்தால் அது உங்களையும், உங்கள் குழந்தையையும் மிகவும் பாதிக்கும். நீங்கள் இவற்றை தவிர்த்து ஓய்வு எடுப்பது சிறந்தது.

8 பொழுதுபோக்கு பூங்கா சவாரிகள்

கர்ப்பகாலத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய பொழுது போக்கு இடம் பொழுதுபோக்கு பூங்காகள். அவைகள் எல்லோருக்கும் மிகவும் உற்சாகமாளிக்க கூடியதாக இருந்தாலும், நீங்கள் சவாரிகளில் போகாமால் இருப்பது நல்லது. சக்தி வாய்ந்த இறங்கும் மற்றும் எதிர்பாராத நீர்வீழ்ச்சிகளும் உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் முன்கூட்டியே பிறக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

9 எடை தூக்குதல்

நீங்கள் எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும். அது நீங்கள் கடைகளுக்கு சென்று வாங்கி வரும் பொருளாக கூட இருக்கலாம்.

மிகவும் கனமான பொருட்களை சுமந்து செல்லும் போது, அவை உங்களை காயப்படுத்தலாம். அதனால் உங்கள் கணவரை ஒரு பெரிய எடை தூக்கும் வெற்றியாளனாக்கி, உங்கள் பைகளை அவரிடம் கொடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இது முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவையோ, இறுதி மூன்று மாதங்களில் குறை பிரசவத்தையோ ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

10 மீன்

நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைக்கு அவசியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாக கடல் மீன் உள்ளது. ஆனால் நீங்கள் அவற்றையும் அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது. அவைகளில் சில மீன்களில் அதிக அளவு பாதரசம் உள்ளதால், இது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு பதிலாக, நீங்கள் சால்மன் மற்றும் டூனா போன்ற மீன் வகைகளை தேர்வு செய்யலாம், இவை குறைந்த அளவு பாதரசம் கொண்டிருக்கும் மற்றும் சாப்பிட பாதுகாப்பானவையாக இருக்கும்.

இது போல் தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, ஆரோக்கியமான உணவு உட்கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பேணி காத்திடுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon