Link copied!
Sign in / Sign up
4
Shares

கர்ப்பகாலத்தில் ஏற்படும் 4 பிரச்சனைகளுக்கான வீட்டு மருத்துவம்


கர்ப்பம் என்பது அனைவர்க்கும் ஆனந்தத்தை அள்ளி வந்து தரக்கூடியது. உங்களுக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம், பிடித்த ஆடைகளை அணியலாம். நன்கு தூங்கலாம் மற்றும் ஓய்வெடுக்கலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். நீங்கள் உங்கள் விருப்பபடி இருக்கலாம். கர்ப்பகாலத்தில் உங்கள் உடலளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும். அதே சமயம், உங்கள் உடலில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் உடல் உபாதைகளை தோற்றுவிக்கிறது. இங்கு அது போன்ற உடல் உபாதைகளுக்கான வீட்டு மருத்துவத்தை பற்றி பார்க்கலாம்.  

1 காலையில் ஏற்படும் பலவீனங்கள்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில், இதுவும் முக்கியமான ஒன்று. உங்களுக்கு காலையில் எழுந்ததும் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படலாம். அது உங்களுக்கு உடல் பலவீனத்தை ஏற்படுத்தும். அதற்கான வீட்டு மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

1 தண்ணீர், சிட்ரஸ் நிறைந்த பழச்சாறு மற்றும் மூலிகை டீ (இஞ்சி போன்றவை) போன்ற திரவ பொருட்களை உணவின் நடுவிலோ அல்லது இரு உணவுகான இடைவெளிகளிலோ குடிக்க வேண்டும்.

2 எளிதாக செரிக்க கூடிய உணவுகளை உண்ணுங்கள். அதிக காரம் மற்றும் உப்பு இருக்கும் உணவுகளை தவிருங்கள்.

3 புளிப்பாக எதையாவது குடியுங்கள். இது குமட்டல் உணர்வை குறைக்கும்.

2 மலச்சிக்கல்

நரம்பு வீக்கம், இடுப்பின் மீது கூடுதல் அழுத்தம் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனின் அதிகரித்த சுரப்பு ஆகியவை குழந்தையை எதிர்பார்க்கும் பெரும்பாலான தாய்மார்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் இந்த சிக்கல்களை தீர்க்காவிட்டாலும், அவற்றின் அழுத்தத்தை குறைக்க உதவும்.

1 அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். இது உங்கள் குடலின் இயக்கங்களை சரி செய்ய உதவுகின்றன.

2 அதிக அளவு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவும் நல்ல வழியாகும்.

3 வெந்நீரில் நன்றாக குளிக்கவும், இது உங்கள் உடல் இயக்கங்களை தூண்டி, உங்களை ஓய்வு பெற செய்ய கூடியது. இது உங்கள் மலச்சிக்கலை சரி செய்யவும் உதவுகிறது.

3 தலைவலி

ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் மற்ற உடல் உபாதைகளை போல தான், தலைவலியும் ஏற்படுகிறது. உங்கள் கர்ப்பகாலத்தில் கோபம் மற்றும் பசி அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறது.

1 அதிக வெப்பமாக இருக்கும் இடங்களை தவிர்த்திடுங்கள். வீட்டை குளுமையாய் இருக்கும் படி செய்திடுங்கள். இது உங்கள் வலியை குறைக்க உதவுகிறது.

2 உங்கள் மன அழுத்தத்தை போக்கி ஓய்வாக உணர செய்ய தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

3 சில தியானங்கள் செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து படலாம். இதை பலனை நீங்கள் நன்றாக உணர துவங்குவீர்கள்.

4 நெஞ்செரிச்சல்

பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தில் அவர்களது தொண்டை மற்றும் மார்புப்பகுதியில் எரிச்சலை உணர்ந்ததாக கூறுகிறார்கள். இது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிக வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

1 சூயிங் கம் மெல்லுவதால், அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கப்படுகிறது. இது நெஞ்செரிச்சலை குறைக்க உதவுகிறது.

2 உங்களுக்கு சூயிங் கம் மெல்லும் பழக்கம் இல்லை என்றால் பரவில்லை. குளிர்ந்த நீரை குடியுங்கள்.

3 உங்களது தூங்கும் முறையும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். நீங்கள் உணவு சாப்பிட்ட உடன் தூங்க சென்றால், அது உங்களுக்கு அதிக அளவில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உணவு உண்ட பின், தூங்க செல்வதற்கு சில கால இடைவெளி கொடுங்கள்.

உங்கள் கர்ப்பகாலத்தில் இவற்றை முயற்சித்து, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் குழந்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon