Link copied!
Sign in / Sign up
7
Shares

கர்ப்பகால வலிகளுக்கான 3 இயற்கை குறிப்புக்கள்

கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக உங்களுக்கு பல விஷயங்களில் ஆலோசனைகள் தேவைப்படும். இந்த நேரத்தில் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்; மயக்கம், வாந்தி, உடல் சோர்வு, கால் வலி போன்றவை இதில் அடங்கும். இவை அனைத்திற்கும் ஒரு நிவாரணம் கிடைக்க வேண்டும் என தாய்மார்கள் ஆசைபடுவார்கள்.

இந்த மாதிரி நேரங்களில், உங்கள் காலை யாராவது பிடித்து விட்டாலோ அல்லது உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து கொடுத்தாலோ நன்றாக இருக்குமல்லவா. உங்களின் வலிகளையெல்லாம் தீர்க்கும் ஒரு மந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வலிகளை தீர்க்கும் வழிமுறைகளை இணையதளத்தில் தேடியிருப்பீர்கள். கர்ப்ப காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் நல்ல தரமானதா என்று பார்க்க வேண்டும்.

இயற்கைக்கு எதையும் குணப்படுத்தும் சக்தி உள்ளது. அதனால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிகளை போக்க சில இயற்கை வழிமுறைகளை இந்த பகுதியில் பார்ப்போம்.

1 கால் வலி

கால்களில் மசாஜ் செய்வது கால் வலிக்கு ஒரு மிக சிறந்த தீர்வாகும். கர்ப்பகாலத்தில் உடலின் எடை அதிகரிப்பதால், அது கால்களுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் கால் வீக்கம் ஏற்படும். ஆலிவ் எண்ணெய் அல்லது விட்டமின் E எண்ணெய் பயன்படுத்தி கால்களை நீவி விடலாம். பெப்பெர்மிண்ட் எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாகும். ஷியா வெண்ணெய்(Shea Butter) கொண்டு மாசஜ் செய்வதால் கால்களுக்கு ஈரப்பதத்தை வழங்கி, கணுக்காலில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. சூடான நீரில் சிறுது உப்பு அல்லது எண்ணெய் சேர்த்து அதில் கால்களை வைக்கலாம். விட்டமின் C மற்றும் E நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய பழச்சாறு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவும். இதனால் கால் வீக்கம் குறையும்.

2 உடல் சோர்வு, வாந்தி மற்றும் மயக்கம்

இயற்கை நமக்களித்த ஒரு மிக சிறந்த வரம் தேங்காய். தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்து குளிக்கலாம். அல்லது தேங்காய் எண்ணெய் கொண்ட சோப் பயன்படுத்தலாம். செயற்கை பொருட்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமம் வறட்சி இல்லாமல் மென்மையாக இருக்கும். பிரசவத்திற்கு பிறகும் இதை தொடரலாம்.

காலை நேரங்களில் ஏற்படும் வாந்தி, மயக்கம், உடற்சோர்வு ஆகியவற்றிற்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாகும். நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது இஞ்சி எண்ணெய்யை சேர்த்து குளிக்கலாம். இதனால் மயக்கம் வாந்தி உணர்வு ஆகியவை ஏற்படாது. அக்குபங்க்சர் அல்லது சிறிது நடைப்பயிற்சி செய்யலாம். புளிப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடைய உணவுகளை சாப்பிடலாம்.

3 வறண்ட சருமம், தோல் அரிப்பு

கருவில் குழந்தை வளர வளர உடலின் வெளியிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இது சரும வறட்சி மற்றும் தோல் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். இதை சரி செய்ய இயற்கை எண்ணெய்களை கொண்ட கிரீம் அல்லது எண்ணெய் தேவைப்படும். தோல் அரிப்பு ஏற்பட்டால், தேங்காய் எண்ணெய் அல்லது விட்டமின் E எண்ணெய்யை சருமத்தில் தடவுங்கள். இது சருமத்தின் உள் புகுந்து சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும். நல்ல ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

கோகோ மற்றும் ஷியா வெண்ணெய்(Shea Butter) ஆகியவை சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் தன்மை கொண்டவை. சரும வறட்சி மற்றும் தோல் அரிப்பிலிருந்து விடுபட ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை உடல் முழுவதும் தடவ வேண்டும். கர்ப்பமான நான்கு மாதத்திலிருந்து பிரசவம் முடிந்த மூன்று மாதங்கள் வரை இதை செய்யலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க முடியும். இயற்கையால் குணப்படுத்த முடியாதது எதுவும் இல்லை. அதனால்,செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon