Link copied!
Sign in / Sign up
37
Shares

கர்ப்பகால உடலுறவின் போது குழந்தையின் உணர்வுகள்..!

உடலுறவு என்பது ஒருவர் மற்றொருவரிடம் பேச தயங்கும் விஷயம். ஆனால், இது அருவருப்பான ஒன்றல்ல. இதை நம் பெற்றோர் அருவருப்பாய் உணர்த்திருந்தால், இன்று நாம் பிறந்திருக்க முடியாது. உடலுறவு என்பது அனைத்து உலகில் உள்ள உயிர்களிடமும் காணப்படும் ஒன்று. பெரும்பாலான தம்பதிகள் கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ள கூடாது என நினைப்பார்கள். ஆனால் கர்ப்பகாலத்திலும் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் போது குழந்தையின் உணர்வுகளை பற்றி பார்க்கலாம்.

உடலுறவு மற்றும் அதன் உச்ச நிலை குழந்தையை மிக அமைதியாக இருக்கவோ அல்லது அவர்களின் செயலை ஊக்கப்படுத்துவதாகவோ செய்கிறது. உடலுறவு காலத்தில் உங்கள் வயிற்றின் அசைவு ரிதம் போல் அவர்களுக்கு ஒலிப்பதால், இதனால் உங்கள் குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். உங்களால் இதை உணர முடியும். மற்ற சில அம்மாக்களின் கருத்துப்படி, குழந்தைகள் உடலுறவு காலத்தில் வயிற்றில் உதைக்கவும் அசையவும் செய்வதாக கூறுகிறார்கள். இது இரண்டுமே சாதாரணமானது தான். இது குறித்து கவலைப்பட ஏதும் இல்லை.

உங்கள் குழந்தை கருப்பை சவ்வு மற்றும் வலுவான கருப்பை தசைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது உடலுறவு காலத்தில் குழந்தையை கருப்பையில் பாதுகாக்கிறது. கருப்பையின் ஆரம்பப்பகுதி சளி போன்ற ஒரு திரவம் சுற்றி இருப்பதால், இது நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. கர்ப்ப காலத்தின் மாதங்களை பொறுத்து சில உடலுறவு நிலைகளை மேற்கொள்ளலாம். உங்கள் பனிக்குடம் உடையும் வரை கூட நீங்கள் பாதுகாப்பாய் உடலுறவில் ஈடுபடலாம்.

கர்ப்பகால உடலுறவால் பிரசவவலியை ஏற்படுத்த முடியுமா?

கர்ப்பகால உடலுறவால், பிரசவவலியை தூண்ட முடியாது. உடலுறவின் உச்சநிலை மற்றும் தூண்டுதல் கருச்சிதைவை ஏற்படுத்தும். உடலுறவின் உச்சநிலையில் ஏற்படும் கருப்பை சுருக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தாதவை. ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்பகாலத்தில் உடலுறவு அனுபவம் வித்தியாசமாக இருந்ததாக கூறுகிறார்கள். சிலர் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும், மற்றவர்கள் அது அதிருப்தியை கொடுத்தாகவும் உணர்கிறார்கள் . இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்திருப்பதால், இது போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன.

எப்படி இருந்தாலும், கர்ப்பகாலத்தின் சில காலங்களில் தம்பதிகள் உடலுறவை தவிர்க்க மருத்துவர் பரிந்துரைத்தால் தவிர்க்க வேண்டும். கர்ப்பகால உடலுறவை பற்றிய உங்கள் திட்டங்களை மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon