Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பகால வாந்திக்கான 5 வீட்டு மருத்துவ குறிப்புகள்

கர்ப்பகாலம் என்பது வாழ்க்கை பயணத்தின் மிக முக்கியமான காலகட்டமாகும். அந்த சமயத்தில் கர்ப்பிணிகள் அனைத்திலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஹார்மோன் சமநிலையில் இல்லாமல் இருப்பதால், திடீரென மனநிலை மாற்றம் ஏற்படும். அதே போல் கர்ப்பகாலத்தில் சில உடல் உபாதைகளும் ஏற்படும். அதில் ஒன்று கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தி. இங்கு கர்ப்பகால வாந்திக்கான 5 வீட்டு மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.

வாந்தி ஏற்பட காரணம்

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே கர்ப்பகால வாந்தி மற்றும் குமட்டலும் காரணமாகிறது. மேலும், குறிப்பிட்ட மணம், குறிப்பிட்ட உணவுகள், சோர்வு, மன அழுத்தம், கவலை, மற்றும் வைட்டமின் அல்லது கனிம குறைபாடுகள் போன்றவையும் கர்ப்பகால வாந்திக்கு காரணமாக இருக்கலாம்.

1 தண்ணீர்

தண்ணீர் குடிப்பது எப்போதும் ஆரோக்கியமான ஒன்று தான் என்றாலும், கர்ப்பகாலத்தில் அதன் பயன்கள் அதிகம். அதிலும் கர்ப்பகால வாந்தி மற்றும் குமட்டலுக்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து. ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பெண்ணிற்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் காலை நேர சோர்விற்கான வாய்ப்புகள் அதிகம்.

தேவையான பொருள்

தண்ணீர் - 1 டம்ளர்

செய்ய வேண்டியது

1 இரவு உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீரை உங்கள் படுக்கைக்கு அருகில் வைத்து கொண்டு உறங்குங்கள். காலை விழித்ததும் சிறிது சிறிதாக தண்ணீரை குடியுங்கள். பின் சிறிது நேரம் உங்கள் படுக்கையிலேயே அமர்ந்திருக்கவும்.

2 தினமும் தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் மனநிலையை சரியாக வைப்பதோடு, செரிமானம் மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

2 இஞ்சி

இஞ்சி கர்ப்ப காலத்திலும் கூட, வாந்தியை சமாளிக்க சிறந்த இயற்கை வழிகளில் ஒன்றாகும். இது உங்கள் செரிமான அமைப்புக்கு உதவுவதோடு, குமட்டல் அல்லது வாந்தியை ஏற்படுத்த கூடிய வயிற்றில் சுரக்கும் அமிலத்தை தடுக்கும்.

தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறியது (தோல் சீவி துருவியது)

தண்ணீர் - 1 கப்

தேன் - தேவையான அளவு

செய்முறை

1 இஞ்சியை தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவிடவும். பின் வடித்து அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து குடிக்கவும்.

2 இதை காலையில் ஒன்றிலிருந்து இரண்டு கப் குடிக்கலாம்.

3 எலுமிச்சை

இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை குறைக்க சிறந்த பழம். இதில் இருக்கும் வாசனை இயற்கையாகவே நம் உடலை கட்டுப்படுத்த கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது. இது குமட்டல் உணர்வை குறைத்து, வாந்தியை தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி கர்ப்பிணி மற்றும் கருவிற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை - 1

தண்ணீர் - 1 கப்

தேன் - தேவையான அளவு

செய்முறை

1 எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்.

2 எலுமிச்சையின் தோலை நுகர்த்தாலே போதும், அது கர்ப்பகால வாந்தி மற்றும் குமட்டலை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

4 புதினா

புதினா கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், காலை நேர சோர்வு அல்லது வாந்தியை குறைக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகை ஆகும். இது வயிற்றை அமைதிப்படுத்த உதவுவதோடு, குமட்டலையும் குறைகிறது.

தேவையான பொருட்கள்

புதினா - சிறிதளவு

தண்ணீர் - 1 கப்

தேன் - தேவையான அளவு

செய்முறை

 

1 புதினாவை ஒரு கப் தண்ணிரில் போட்டு 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். பின் அதை வடிகட்டி அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து குடிக்கவும்.

2 சில பெண்களுக்கு புதினாவும் கூட குமட்டலை ஏற்படுத்தலாம். அவர்கள் புதினாவை தவிர்ப்பது சிறந்தது.

 

5 சோம்பு

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலுக்கான மற்றொரு சிறந்த தீர்வு சோம்பு. இது செரிமான மண்டலத்தை சரி வர இயங்க செய்வதோடு, அதை ஓய்வு நிலையில் வைக்கவும் உதவுகிறது. அதன் நறுமணம் கலந்த சுவை வயிற்றை அமைதி படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்

சோம்பு - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1 கப்

தேன் - தேவையான அளவு

செய்முறை

1 சோம்பை தண்ணீரில் போட்டு 10 நிடங்களுக்கு கொதிக்க விடவும். பின் சோம்பின் மருத்துவ தன்மை நீரில் இறக்கும் படி 5 நிமிடங்கள் மூடி வைத்திருக்கவும்.

2 பின் அந்த நீரை வடித்து கொள்ளவும். அதனுடன் சில துளி எலுமிச்சை சாரு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து காலை எழுந்ததும் குடிக்கவும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon