Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாம்பத்திய வாழ்வில் கிடைக்கும் அற்புதமான தருணம் தாய்மையடைவதாகும். ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் உருவாகும் அதிசயமே தாய்மையாகும். நவீன தொழில் நுட்ப வசதிகளின் உதவியுடன் குழந்தை உருவான காலம் முதல் பிரசவ காலம் வரை குழந்தையின் வளர்ச்சியினை முறையான பரிசோதனைகளின் மூலம் நாம் அறியலாம்.கர்ப்பகாலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகளை பற்றி இங்கு காணலாம்.

சிறுநீர் பரிசோதனை

மாதவிலக்கு சீராக உள்ள பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாதவிலக்கு தள்ளிப்போனாலே கர்ப்பமானது உறுதியாகிவிடும். எனினும், சிறுநீர் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி கொள்ளலாம். காலை நேரத்தில் இதை செய்வது துல்லியமான பலனை அளிக்கும். இப்பரிசோதனையில் ஹியூமன்கோரியானிக்கொன டோட்டிராபிக் ஹார்மோன் சிறுநீரில் இருக்கிறதா? என்பது சோதிக்கப்படும்.

இரத்த பரிசோதனை

சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியாகவில்லை எனில் இரத்தத்தில் உள்ள HCG ஹார்மோன் அளவினைப் பரிசோதித்து கர்ப்பம் உறுதியானதை தெரிந்து கொள்ளலாம்.

இரத்த அழுத்தம் சோதனை

கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தமானது 120/80 மிமீ மெர்க்குரிக்கு கீழ் இருந்தல் அவசியம். ஆனால் 140/90மிமீ மெர்க்குரிக்கு மேல் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

சர்க்கரை அளவு பரிசோதனை

சில பெண்களுக்கு கர்ப்பம் ஆகும் முன்னரே நீரிழிவு நோய் இருக்கும். இப்படி ஏற்கனவே நீரிழிவு நோய் இருக்கும் கர்ப்பிணிகள்,சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். எனவே மருத்துவரை அணுகி சர்க்கரை பரிசோதனை செய்துகொள்வதோடு சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆலோசனைகளை பெற வேண்டும்.

 

தைராய்டு பரிசோதனை

கருவுற்ற இரண்டாம் மாதம் இந்த பரிசோதனையை செய்து கொள்வது அவசியமாகும்.

ஹெச்ஐவி (HIV) பரிசோதனை, விடிஆர்எல் பரிசோதனை (VDRL), ஹெப்படைட்டிஸ் B பரிசோதனை

கர்ப்பிணிகளுக்கு ஹெச்ஐவி, சிபிலிஸ், ஹெப்படைட்டிஸ் (மஞ்சள் காமாலை) ஆகிய நோய்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவசியம்.

 

சிறுநீரில் புரதம் சர்க்கரை பரிசோதனை

சிறுநீரினை பரிசோதித்து புரதம் மற்றும் சர்க்கரையின் அளவானது கட்டுபாடான அளவுக்குள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது அவசியம்

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை

1 கர்ப்பமுற்ற 8 முதல் 13 வாரத்திற்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்பட்டால் நியுக்கல் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதில் கருவில் இருப்பது ஒரு குழந்தை தானா, இரட்டை குழந்தையா, முத்துப்பிள்ளை கர்ப்பமா அல்லது பொய்க் கர்ப்பமா போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

2 கர்ப்பமான 20 முதல் 22 வாரங்களில் குறைபாடுகள் கண்டறியும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். இதில் கருவாக உள்ள குழந்தையின் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்று அறியலாம்.

3 32 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அல்ட்ரா சவுண்ட்ஸ்கேன் சோதனை செய்தவன் மூலம் கருவின் குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, கருவின் குழந்தையின் எடை கூடியுள்ளதா என்பதனையும் அறியலாம்.

 

சிறப்புப் பரிசோதனைகள்

1 கர்ப்பமுற்ற 11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் நியுக்கல் ஸ்கேன் செய்யும் போது கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் கினட்ரோம், டிரைசோமி போன்ற பிறவிக் கோளாறுகள் உள்ளதாக சந்தேகம் எழுந்தால் ஈஸ்டிரி யால் (estriol), HCG அளவு AFP, PAPP-A ஆகியவையும் செய்யப்படும். தேவைப்பட்டால் ஆம்நியோசின்ன சிஸ், கோரியானிக் வில்லஸ் சாம்ப்பிளிங் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2 கருவில் உள்ள குழந்தைகளுக்கு எக்கோ (Fetal echo) கருவிலுள்ள குழந்தைக்கு பிறவிலேயே தோன்றக்கூடிய இருதயக்கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிய இது உதவுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon