Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்ப கால களைப்பிற்கான காரணமும் தீர்வும்

கர்ப்பகாலம் என்பது தம்பதிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த காலம் மகிழ்ச்சியை தரும் அளவிற்கு வேதனைகளையும் கொடுக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் எதை செய்யும் முன்பும் பல முறை யோசித்து செய்ய வேண்டி இருக்கும். பல அறிவுரைகளும் இந்த மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும். இங்கு கர்ப்பகாலத்தில் களைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.

கர்ப்பக் காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை இவ்வாறு களைப்பு ஏற்படுவது இயல்பு. இந்தக் காலக்கட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் பழக்கிக் கொள்ள உடலுக்கு அவகாசம் தேவைப்படும்.

பன்னிரண்டாம் வாரம் வரை ஹார்மோன் மாற்றங்கள் தொடரும். கர்ப்பக் காலம் முழுவதிலும் கர்ப்பிணிக்கு களைப்பு ஏற்பட்டு அடிக்கடி சோர்ந்துவிடக் கூடும். குறிப்பாக நிறை மாதத்தின் போது களைப்பு அதிகரிக்கும்.

இளஞ்சிறார்களை உடையவர்களுக்கும், களைப்பைத் தரும் வேலையில் இருப்பவர்களுக்கும் இந்தச் சூழலைக் கையாள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

தடுக்கும் முறைகள்

1 கர்ப்பிணிகள் பகலில் இரண்டு மணி நேரமாவது முழு அளவில் ஓய்வெடுக்க வேண்டும். நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் உறங்கி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓய்வெடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

2 சில சமயம் மனக் கவலையால் சோர்வு வந்துவிடும். நீங்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுவதாக இருந்தால், அதைப்பற்றி உங்கள் கணவர், மருத்துவர் அல்லது நண்பருடன் மனம் திறந்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.

3 முடிந்த வரை கர்ப்பகாலத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிக்க பழகி கொள்ள வேண்டும்.

4 அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

5 உணவில் சர்க்கரை அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

6 அதிக அளவில் நார்சத்து, இரும்பு சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

7 உணவை ஒரே முறையில் அதிகமாக சாப்பிடாமல் சிறிது சிறிதாக பிரித்து 6 முறையாக உண்ணலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon