Link copied!
Sign in / Sign up
11
Shares

கரப்பான் பூச்சி தொந்தரவா?

பெண்கள் சமையலறைக்குள் வருவதில்லை என கவலைக்கொள்ளும் தாய்மார்களே, உங்கள் மகள் மீது காட்டும் பாசத்தை காட்டிலும் கரப்பான் பூச்சி மேல் காட்டுவது எதனால்? பின்ன என்னங்க, இவ்வளவு கரப்பான் பூச்சியவா வளர்ப்பிங்க. நீங்க சர்க்கரை போட்டு டீ சாப்பிடலனாலும் கரப்பான் பூச்சிக்கு ஊட்டிவிடுறது சரிதானா? நீங்க கொடுத்த இடம்தாங்க, இன்னைக்கு கரப்பான் பூச்சி, அதுக்கு எதிரியான மருந்து மேலயே அழகா உட்கார்ந்து பறந்து போகுது. நான் டிரீம் வேர்ல்ட்ல இருந்தா, எனக்கு கம்பெனி கொடுக்க, எனக்கு முன்னாடியே, அது  கனவுலயும் என்ன வந்து சுரண்டுது. நம்ம நாட்டுல ஜனத்தொகைய விட, கரப்பான் பூச்சி தான் அதிகம் இருக்குங்க...

இப்படியே போனா, என்ன தான் முடிவுன்னு கன்னத்துல கை வச்சிட்டு உட்கார்ந்திருந்தனா... அப்போ தான் என் அக்கம்மா சொன்னாங்க. இருக்கும் இடத்தை விட்டு எங்கடா தேடி போற மருந்தன்னு...

அட ஆமாங்க, கரப்பான கொல்ல நம்ம வீட்டுலயே நிறையா வழிமுறை இருக்கு. அது என்ன? வாங்க பார்க்கலாம்.

சமையல் சோடாவும், சர்க்கரையும்:

இந்த சமையல் சோடாவும் சர்க்கரையும் சேர்ந்தால் கரப்பான் பூச்சிக்கு குட்பை சொல்லிவிடலாம். 

தேவையான பொருட்கள்:

சமையல் சோடா, சர்க்கரை, கிண்ணம்

சமையல் சோடா என்பது நச்சு தன்மை கொண்டதல்ல. ஆனால், இது கரப்பானின் வயிற்றில் செல்ல, அதனால் கரப்பான் விரைவில் சாகும். சமையல் சோடாவையும், சர்க்கரையையும் சம அளவில் கலந்து கொள்ளுங்கள். அதை கரப்பான் தொந்தரவு தரும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிடுங்கள். சமையல் சோடாவுடன் கலக்கப்பட்டிருக்கும் சர்க்கரை வாசம் கரப்பான் மூக்கை துளைக்க, இதனால், வந்து சாப்பிட்டு சாவுக்கு நாள் தேடிக்கொள்ளும். சமையல் சோடா தான் கரப்பானை கொல்லும். சர்க்கரை என்பது கரப்பானுக்கு ஆசைக்காட்ட நாம் சேர்க்கும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

போரிக் அமிலம்:

போரிக் அமிலம் கடைகளில் கிடைக்கக்கூடியது. இதற்கு கரப்பானை கொல்லும் சக்தி இருக்கிறது. இந்த போரிக் அமிலத்தை குழந்தை மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் பார்வையில் படாதவாறு வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அமிலத்தை நாம் சுவாசிப்பதால் உடல்நிலை சரியில்லாமல் போகக்கூடும். அதனால், எந்த இடத்தில் கரப்பானை கொல்ல இந்த அமிலத்தை வைத்தீர்கள் என்பதை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஈரமான இடத்தில் இந்த போரிக் அமிலம் செயல்படாது.

போரிக் அமிலம் என்ன செய்யும்?

கரப்பான் பூச்சி, இந்த போரிக் அமிலத்தில் ஓட தொடங்குகிறது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக அமிலத்தின் தாக்கம் ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க செய்ய, இறுதியில் செத்து மடிகிறது.

புன்னை இலை:

ஒரு உயிரை கொல்வதை பாவம் என நினைக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், கரப்பான் பூச்சை வீட்டை விட்டு ஓட மட்டுமே செய்யவும் முடியும். எப்படி என கேட்கிறீர்களா? இந்த புன்னை இலையின் மணமானது கரப்பான் பூச்சிக்கு அலர்ஜி. அதனால், இந்த வாசத்தை கண்டவுடன் வீட்டை விட்டு தூர ஓட தொடங்கும்.அதோடு , இந்த புன்னை இலை எந்த வித பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்துவதில்லை. 

தேவையான பொருட்கள்:

உரலும், உலக்கையும்

புன்னை இலை (கை அளவிற்கு)

உரலும் உலக்கையும் எல்லாம் லேட்டஸ்ட் மெஷின் இன்னும் வரவில்லை என்பதால், உரல் - உலக்கை இல்லாவிட்டாலும், புன்னை இலையை நன்றாக நொறுக்கி கொள்ளுங்கள். அந்த இலையை நன்றாக பொடியாக்கிக்கொண்டு கரப்பான் கால்களை நீட்டி படுத்திருக்கும் இடத்தில் தூவி விடுங்கள். புன்னை இலை தேர்ந்தெடுப்பதில் ஆசிய இலையாக இருத்தல் வேண்டும். ஏனெனில், அந்த வாசம் தான் கரப்பானை தன்  வசம் இழுத்து வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறது.

வெள்ளரியும் கரப்பானை வீட்டை விட்டு துரத்தும்.

உரித்த எலுமிச்சையும், எலுமிச்சை ஜூஸும்:

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எலுமிச்சை பயன்படுத்துவது வழக்கம். சட்டையில் கறைப்படிந்தால் டிடெர்ஜென்ட் வாங்குகிறார்களோ இல்லையோ... கண்டிப்பாக ஒரு எலுமிச்சை பழம் வாங்கி அந்த இடத்தில் தேய்த்து கறையை விரட்டி அடிப்பார்கள். 

இந்த எலுமிச்சையில் தேவையான அளவிற்கு கிருமிகளை எதிர்க்கும் பண்பு இருக்கிறது. அதனால், இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கிறது.

1. எலுமிச்சையை முழுவதுமாக சாறு பிழிந்து, அந்த ஜூஸை கரப்பான் வரும் இடங்களில் தெளித்திடலாம்.

தேவையான பொருட்கள்:

1. பெரிய கிண்ணம்.

2. எலுமிச்சை ஜூஸ்

3. துணி

எலுமிச்சை ஜூஸுடன் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். அந்த சாறை கொண்டு தரையை சுத்தம் செய்ய வேண்டும். இதனால், எலுமிச்சை வாசனை பிடிக்காமல் கரப்பான் வீட்டை விட்டு வேகமாக வெளியேற வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய எளிய வழிமுறைகளால் கரப்பானை நம்மால் துரத்த முடியும்போது வேற எதை வைத்து இனிமேலும் கரப்பானை ஹிட் பண்ண போகிறீர். இல்லையென்றால், சாம்பார்ல கரப்பான் இருக்கான்னு பார்த்து சாப்பிடுறத தவிர நமக்கு வேற வழியே இல்லைங்க. என்ஜாய் பண்ணலாம். கரப்பானுடன் சேர்ந்து கரீனா சோப்ராவை கனவில் கண்டு...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon