Link copied!
Sign in / Sign up
105
Shares

கணவர்களிடம் மனைவிகள் எதிர்பார்க்கும் 10 விஷயங்கள்

பெரும்பாலான பெண்களுக்கு காதல் என்பது விலையுர்ந்த பரிசுகளிலோ, வெளிநாட்டு பயணங்களிலோ இல்லை. அவர்களின் கணவர்கள் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அவர்கள் விரும்புவதெல்லாம் கணவர்களின் அன்பும், தங்களின் செயல்களை பாராட்டவேண்டும் என்பதுதான். வெறும் நல்லவராக மட்டும் இருப்பது அவர்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது. பெண்கள் தங்கள் கணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் 10 விஷயங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. எதிர்பாராத முத்தம்

காதலை சொல்லும் அழகிய மொழிதான் முத்தம். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் போது தரும் முத்தமும் இரவு தூங்கும்முன் தரும் முத்தமும் மிகவும் அவசியம். நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இருக்கும்போது அவர்களின் நெற்றியில் மென்மையை தரப்படும் முத்தம் கணவர் மீதான மனைவியின் காதலை அதிகரிக்கும்.

2 கை கோர்த்து நடப்பது

பொது இடங்களில் அவர்களின் கை கோர்த்து நடப்பது, அவரக்ளை பாதுகாப்பாய் உணரச்செய்யும். அது மட்டுமல்ல அவர்களால் நீங்கள் மகிழ்ச்சையாய் இருப்பதையும், அவர்களுடன் இருப்பது உங்களுக்கு எந்தவித தர்மசங்கடமும் இல்லையென உணரச்செய்யும். கணவன் மனைவி உறவுக்குள் இது மிகவும் அழகான ஒன்றாகும்.

3 வீட்டு வேலைகளில் உதவுதல்

மனைவி வேளைக்கு செல்பவரை இருந்தாலும் வீட்டை நிர்வகிப்பது அவரின் வேலை மட்டும் ஆகுது. கணவரும் அவர்களின் வேலையை பகிர்ந்து கொள்வதை பெண்கள் மிகவும் விரும்புவார்கள். இது மனைவி மேல் கணவருக்கு உள்ள அக்கறையையும், அவர்கள் மட்டும் வீட்டுச்சுமையை தங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் உணர்த்தும். காய்கறி வாங்குவதில் உதவுதில் இருந்து படுக்கையை சரி செய்யும் வரையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர்கள் மகிழ்ச்சியை பன்மடங்காக்கும்.

4 கருத்துக்களை மதித்தல்

உங்களது கணவர் அவருக்கு தேவையானவற்றிற்கு மட்டும் உங்கள் கருத்துக்களை கேட்காமல் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கேட்கும்போது நீங்கள் சிறகின்றி பறப்பீர்கள். இது உங்களை கணவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகாவே இருப்பதாய் உணரசெய்யும். இது உங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும்.

5 குளிரும் போது ஸ்வெட்டரை கொடுத்தல்

இது பல திரைப்படங்களில் பார்த்த ஒன்றுதான். ஆனால் நம் வாழ்க்கையிலும் இது தேவையான ஒன்றுதான். மனைவியின் குளிரை அவர் சொல்வதற்கு முன்பே அறிந்து அதை சரி செய்ய வேண்டும். இது கணவர்களது கடமை மட்டும் அல்ல அவர்கள் அன்பின் அடையாளமும்தான்.

6 கவனித்தல்

மனைவி எது கூறினாலும் கவனிக்க கற்றுகொள்ளுங்கள். அவர்கள் உலருவதாக தோன்றினாலும் கவனிப்பதை நிறுத்தகூடாது. வேலை, நண்பர்கள் என அவர்கள் உங்களிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும்போது, அதற்கு நீங்கள் செவிசாய்க்க வேண்டும். அவர்கள் கூறுபவற்றை மட்டும் கவனிக்காமல் அந்த உரையாடலை நீங்களும் தொடருங்கள்.

7 பரிசுகள் வாங்கித்தருதல்

பரிசுகள் என்றால் நகைகளோ, கார்களோ அல்ல. அவர்களுக்கு பிடித்த பூக்களோ அல்ல சாதாரண ஐஸ்கிரீமோ போதும் அவர்களை மகிழ்விக்க. எதிர்பாராத நேரத்தில் நீங்கள் தரும் சின்ன பொருட்கள் கூட அவர்களை அதிக ஆச்சரியப்படுத்தும். மேலும் உங்கள் காதலை கடிதமாக எழுதித்தருவது, உங்கள் இருவர் காதலின் நினைவுசின்னமாக கூட விளங்கும்.

8 அவர்களுக்கு நேரம் ஒதுக்குதல்

ஒருநாள் விடுமுறை எடுத்து உங்கள் நேரம் முழுவதையும் அவர்களுடன் செலவிடுங்கள். இது அவர்களை பரவசமடைய செய்வதோடு உங்களுக்கிடையேன நெருக்கமும் அதிகரிக்கும். அவர்கள் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

9 உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்ளுதல்

அவர்கள் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவர்களுடன் இருந்து தாய் போல பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கவனிப்பில் அவர்கள் விரைவாக குணமடைவதோடு ஆரோக்கியமாகவும் மாறவேண்டும்.

10 காதலை வெளிப்படுத்துதல்

இதுதான் மிகவும் முக்கியம். தினமும் அடிக்கடி 'ஐ லவ் யூ' சொல்ல வேண்டும். இது உங்கள் கேட்ட நேரத்தை நல்ல நேரமாகவும், நல்ல நேரத்தை சிறந்த நேரமாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. மேலும் பல சண்டைகளை முடித்துவைக்கும் மந்திரமாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon