Link copied!
Sign in / Sign up
10
Shares

கணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்!

திருமணமான பின் பெண்ணானவள், தான் பிறந்து வளர்ந்த வீட்டை விடுத்தது, தன் சொந்த பந்தங்களை எல்லாம் விடுத்து கணவரின் இல்லம் புகுகிறாள்; இவ்வாறு பெண் தன் புகுந்தகத்தரை மதித்து, அவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுள் ஒருத்தி ஆவது போல், கணவன்மார்களும் மனைவியின் குடும்பத்தை ஏற்று, அவர்களுள் ஒருவராக முயற்சிக்க வேண்டும். ஆகையால், கணவர்களை இந்த விஷயத்தில் ஈடுபடுத்தி, செயல்படுத்த உதவும் சில குறிப்புகளை இந்த பதிப்பில் அளித்துள்ளோம்! படித்து ஓர் குடும்பமாகுங்கள்..!  

1. பொதுவான விஷயம்!

கணவர், தன் மாமியார் வீட்டாரின் இரசனைகள் என்னென்ன என்று அறிந்து, அதில் ஏதேனும் உங்கள் இரசனையோடு பொருந்துமா என்று பார்த்து, அந்த விஷயங்களை அவர்களுடன் பேசியோ, அவர்களுடன் சேர்ந்து செய்தோ அவர்களில் ஒருவராக முயற்சிக்கலாம்.

2. சகோக்கள்..

மனைவியின் சகாக்களுடன் கணவர் நண்பர் போல் பழகத் தொடங்கினாலே, அக்குடும்பத்தில் ஒரு மகனாக மாறிவிடலாம்.

3. சுற்றுலா..

குடும்பமாக சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்து, போய் வாருங்கள்; இது குடும்பத்தினரிடையே நெருக்கம் ஏற்பட உதவும்.

4. மாமியார் - மாமனார்

மாமியார் மற்றும் மாமனாருடன் ஒரு மகனைப் போல பழக முயற்சியுங்கள்; இந்த ஒரு விஷயம் உங்கள் மனைவியின் காதலையும் கூட ஒரு நொடியில், அதிகரித்து விடும்.

5. அன்பு

மனைவி குடும்பத்தாரை வேறு யாரோ என்று கருதாமல், உங்களவராய் நினைத்து அன்பு காட்டுங்கள்.

6. பிணைப்பு

மனைவி குடும்பத்தாருடன் ஒருவித மகன் போன்ற பிணைப்பை ஏற்படுத்தி, ஒரே குடும்பமாய் வாழ முயற்சித்தால், வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இராது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon