Link copied!
Sign in / Sign up
4
Shares

கணவர்கள் மனைவியை ஏமாற்றுவதற்கான 7 காரணங்கள்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாகும். இது சிலருக்கு நல்ல புரிதலுடன் நிரந்தர வாழ்வாகவும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைய கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. சந்தேகம், தவறான உறவு, மன ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இதற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இங்கு கணவர்கள் மனைவியை ஏமாற்றுவதற்கான 7 காரணங்களை பார்க்கலாம்.

1 தொடர் பிரச்சனைகள்

வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்படும் போது, அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பின் காரணமாக மன அமைதி குறைந்து நிம்மதி இழப்பார்கள். ஆண்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க முன் வராமல், தவிர்க்கவே நினைப்பார்கள். இது மனைவியுடனான நெருக்கத்தை குறைத்து, மற்றவர்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும். அது அவர்களுக்கு நிம்மதி தருவதாக இருந்தால், மனைவியை ஏமாற்றவும் செய்வார்கள்.

2 சலிப்பு

சிலருக்கு எதிலும் புதுமை காணும் எண்ணம் இருக்கும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை ஒரே மாதிரி செல்வது சலிப்பை ஏற்படுத்தும். இவர்கள் எளிதில் மற்ற பெண்களால் கவரப்பட்டுவிடுவார்கள்.

3 உடலுறவு

உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இது சிலருக்கு மனைவியுடன் திருப்தியை ஏற்படுத்தும். ஆனால், சிலர் புது வகை இன்பங்களை சோதிக்க மற்றவர்களை தேடுவார்கள். இது தவறு என அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் உடலுறவில் சிறந்தவர்களாக இருப்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவும் இது போல் செய்வார்கள்.

4 பாசம்

திருமணமான புதிதில் இருக்கும் அக்கறை, சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகள், வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்தல் மற்றும் வேலைப்பளுவின் காரணாமாக அவர்கள் நடுவில் அன்பில் சிறிது இடைவெளி ஏற்பட்டிருக்கும். அந்த சமயத்தில் ஆண்கள், அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.

5 பாராட்டு

கணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவிகள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது.

6 பாதிப்பு

சிறுவயதில் பாதிப்பும் அவர்களை அப்படி செய்ய தூண்டும். மற்றவர்கள் ஏமாற்றுவதை பார்த்து அவர்கள் வளர்ந்திருந்தால், அவர்களுக்கும் ஏமாற்றுவது தவறில்லை என்ற எண்ணத்தின் காரணமாகவும் அவ்வாறு நடந்து கொள்ளலாம்.

7 பழிக்கு பழி

மனைவிகள் சிலர் கணவருக்கு தெரியாமல் சிலவற்றை செய்து அவர்களை ஏமாற்றுவார்கள். அது கணவனுக்கு தெரிய வரும் போது, அவர்கள் பழிவாங்கும் நோக்கோடு அவர்களும் அதை திரும்ப செய்வார்கள்.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon