Link copied!
Sign in / Sign up
3
Shares

கணவரின் குழந்தை வளர்ப்பு திறனை பாராட்டும் 5 அம்மாக்கள்

குழந்தை வளர்ப்பு என்று வரும் போது, அது தாயை சார்ந்தது மட்டுமல்ல. ஒரு தந்தையையும் அதில் மிகப்பெரிய பங்காற்றுகிறார். குழந்தை வளர்ப்பில் ஒரு தந்தையின் பங்களிப்பு அந்த குழந்தையின் வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. ஒரு தந்தையாக, உங்கள் கணவரின் குழந்தை வளர்ப்பு திறன்கள் உங்களிடம் இருந்து முற்றிலுமாக வேறுபாடும், ஆனால் அவர்கள் தங்கள் கடமையை கச்சிதமாக செய்வார்கள். இங்கு கணவரின் குழந்தை வளர்ப்பு திறன் குறித்து 5 அம்மாக்கள் கூறியிருப்பவற்றை பார்க்கலாம்.

1 அவர் எப்படி அதை செய்கிறார்

" நான் எனது குழந்தையை தூங்க வைக்க பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்வேன்; ஆனால் அவரோ இரண்டே நிமிடத்தில் தூங்க வைத்து விடுவார். எப்படி?"

இது பொதுவான ஒன்று. நீங்கள் உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க, தூங்க வைக்க, அவர்களின் அழுகையை நிறுத்த பல சிரமங்களை மேற்கொண்டாலும், இவை அனைத்தையுமே உங்கள் கணவர் சிரமமே இல்லாமல் முடித்துவிடுவார். உங்கள் குழந்தைக்கு ஒரு மாற்றம் தேவை - வேறு குரல், வேறிடத்தில் கவனத்தை திசை திருப்புதல் போன்றவை. ஆண்கள் இவற்றில் கில்லாடிகள். அதனால் தான் அவர்களால் மேற்சொன்ன வேலைகளை செய்ய முடிகிறது. இதனால் நீங்கள் பொறுப்பற்ற அம்மா என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

2 அவர் ஏன் அப்படி செய்கிறார்?

" நான் என் குழந்தைக்கு கற்பிக்க பல வழிகளில் முயற்சி செய்கிறேன். ஆனால் என் கணவரோ எனக்கு எதிர்மறை. இப்படி இருந்தால் என் குழந்தையால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது".

குழந்தை வளர்ப்பு திறன் ஒவ்வரிடமும் வேறுபடும். ஏனெனில் ஒவ்வருவரும் வெவ்வேறு சூழலில் வளர்கிறார்கள். குழந்தைக்கு கற்பிக்கும் காலத்தில் யாராவது ஒருவர் பொறுப்பாக எடுத்து செய்தால், குழந்தை சிறந்த முறையில் வளரும். நீங்கள் ஒரு மாதிரியும் உங்கள் கணவர் வேறு மாதிரியும் கற்பித்தால் அது குழந்தையை குழப்பலாம். ஏதாவது ஒரு முறையை தேர்ந்தெடுத்து அதை பின்பற்றுங்கள். இதை உங்கள் கணவரிடம் பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். அதையும் மீறி உங்கள் கணவர் உங்களுக்கு உதவி செய்ய நினைத்தால், அவரை வீட்டு வேலைகளில் உதவியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.

3 நொறுக்குத்தீனிகள்

" நான் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுப்பதை தவிர்க்கிறேன், ஆனால் என் கணவரோ, திருட்டுத்தனமாக என் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்".

ஒரு குழந்தையை எளிதாக எதையும் செய்ய வைக்க முடியும். ஆனால், ஒரு பெற்றோர் இந்த மாதிரி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தவில்லை என்றால், அது மோசமான விளைவுகளை கொடுக்கும்.

4 குணாதிசயங்கள்

" என் கணவர் எதையும் கண்டுகொள்ளாத குணாதிசயம் கொண்டவர். ஆனால் நானோ சற்றே கண்டிப்பானவள். இது என் குழந்தையின் குணாதிசயத்தை பாதிக்குமா".

இரு வேறு குணாதிசயங்கள் கொண்ட பெற்றோர்கள், ஒரு குழந்தைக்கு வெவ்வேறு விஷயங்களை கற்றுக்கொடுப்பார்கள். இது அந்த குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக, பெற்றோர்களின் குணாதிசயங்கள் சரிசமமாக அந்த குழந்தையிடம் இருக்கும். வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க உங்கள் கணவரின் குணாதிசயமும், தேவையான நேரத்தில் கண்டிப்பு காட்ட உங்களின் குணாதிசயமும் உங்கள் குழந்தையிடம் இருந்தால் அதில் தவறேதும் இல்லையே.

5 பிரச்னையை தீர்ப்பவர்

" நாள் முழுவதும் முயற்சி செய்து, தீர்க்க முடியாத என் குழந்தையின் கஷ்டத்தை சில நிமிடங்களில் சரி செய்தார் என் கணவர். என் குழந்தையின் காலில் போடப்பட்டிருந்த காலணி அசௌகரியமாக இருந்ததே அதற்கு காரணம்".

சில சமயங்களில், சின்ன சின்ன சந்தோசங்கள் தான் உங்களின் நாளை பிரகாசப்படுத்தும். உங்கள் குழந்தையின் அசௌகரியத்துக்கு காரணம் காலில் அணிந்திருக்கும் செருப்பு தான் என்று எப்போது உங்கள் கணவர் கண்டுபிடிக்கின்றாரோ, உடனடியாக அதை சரி செய்ய முயல்வார். உங்கள் குழந்தையை சமாதானப்படுத்துவார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்கள் கணவரும் ஒரு நல்ல பெற்றோர் தான். எனவே அவரை குறைவாக எடை போட வேண்டாம். மாறாக அவரை ஊக்கப்படுத்த பாருங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon