Link copied!
Sign in / Sign up
2
Shares

கணவரிடம் மனைவிகள் எதிர்பார்க்கும் ஐந்து மாற்றங்கள்

கணவர் செய்யும் சில விஷயங்கள் மனைவியுடைய மோசமான மறுபக்கத்தை வெளியே கொண்டுவரும். உங்கள் கணவரிடம் நீங்கள் மாற்ற நினைக்கும் சில பழக்கவழக்கங்கள் இருக்கும். நிச்சயமாக அந்த பழக்கவழக்கங்களை மாற்ற முயற்சி செய்வீர்கள். அவர் மனதை புண்படுத்தாமல் அந்த பழக்கங்களை மாற்ற வேண்டுமென்பதில் கவனமாக இருங்கள்.

1. உடையலங்காரம்

உங்கள் கணவரின் உடையலங்காரம் உங்களை சோர்வடைய செய்யலாம், முக்கியமாக பொதுஇடங்களுக்கு செல்லும்போது. உங்களுக்கு பிடித்தமான உடையை, அழகாக அயர்ன் செய்து அவருக்கு கொடுங்கள். இது தேவையின்றி நீங்கள் வாதிடும் நேரத்தையும் இருவரின் சக்தியையும் சேமிக்கும்.

2. பல் துலக்கும்போது வீட்டை சுற்றி நடத்தல்

உங்கள் கணவர் பல்துலக்கி கொண்டே வீட்டில் நடப்பதுதான் காலையில் நீங்கள் பார்க்கும் முதல் காட்சி என்றால் அது உங்களை வெறுப்படையத்தான் செய்யும். இதை முயற்சி செய்து மெதுவாக அவரிடம் சொல்லுங்கள். அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பது உறுதி.\

3. ஷேவ் பண்ணாமல் இருத்தல்

ஷேவ் பண்ணாத முகம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே விலையுயர்ந்த ரேஸர்களை பரிசளியுங்கள். அதோடு அதை அடிக்கடி பயன்படுத்த உற்சாகமளியுங்கள்.

4. பொருத்தமற்ற உரையாடல்கள்

உங்கள் தோழிகளுடன் அவர் தேவையில்லாமல் பேசும்போது அது உங்களை எரிச்சலடைய செய்யும். அவர் நோக்கம் தவறானதாக இல்லை என்றாலும் அதை தவிர்க்க அறிவுறுத்துவது நல்லது. அப்படி அவர் நடந்து கொள்ளும்போது சமிக்கை மூலம் அவரை அமைதிப்படுத்துங்கள்.

5. காட்டுமிராண்டிபோல் சாப்பிடுதல்

கணவருடன் வெளியே சென்றிருக்கும் மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் அளவிற்கு அவர்கள் சாப்பிடுவது உங்களை தர்மசங்கடப்படுத்தும். டேபிள் மேன்னர்ஸ் இன்றி சாப்பிடுவது உங்களின் இனிய நேரத்தை பாழாக்கும். எனவே அன்பான முறையில் அவரின் மனம் புண்படாதபடி அமைதியாக சாப்பிட சொல்லுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon