Link copied!
Sign in / Sign up
2
Shares

கணவரின் சகோதரியுடன் உறவை பலப்படுத்தும் 5 வழிகள்

உங்கள் கணவரின் சகோதரி உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறந்த தோழியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். உங்களை மாமியாரிடம் இருந்து காப்பாற்றவும் குழந்தை வளர்ப்பில் அதிகம் உதவக்கூடியவர். மேலும் உங்களின் நெருங்கிய தோழியாகவும், சிறந்த ஆலோசகராகவும் இருப்பார். உங்கள் கணவரின் சகோதரியுடனான உறவை அன்பான உறவாக மாற்றக்கூடிய செயல்கள்:

1. ஷாப்பிங் அழைத்து செல்லுதல்

உங்களின் கணவரின் சகோதரியை அழைத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த கடைகளுக்கு செல்லுங்கள். அது விலையுயர்ந்த கடையாக இருந்தாலும் சரி தெருவோர கடைகளாக இருந்தாலும் சரி அவர்களை அழைத்துச்செல்லுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் வரை ஷாப்பிங்கை நிறுத்தாதீர்கள்.

2. குழந்தைகளுடன் வெளியே செல்லுதல்

உங்களுடைய இருவரின் குழந்தைகளை வெளியே பூங்காவிற்கு அழைத்து செல்லுங்கள். குழந்தைகளுடன் நீங்கள் இருவரும் விளையாடி குழந்தைகளாகவே மாறுங்கள். அனைத்து விதமான உணவுகளையும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுங்கள். இது உங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைவதோடு உங்களுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

3. ஸ்பா செல்லுதல்

ஒன்றாக அழகு நிலையம் செல்வதை விட வேறு சிறந்த வழி இல்லை. அவர்களோடு இணைந்து பழச்சாறு பருகுங்கள். இப்பொழுதுதான் நீங்கள் வீடு மற்றும் சமையலறை தொந்தரவுகளில் இருந்து விலகி இருப்பீர்கள். இந்த நேரத்தை அவர்களுடன் நெருங்கி பழக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

4. விருந்துக்கு அழைத்தல்

இருவரும் இணைந்து வீட்டில் விருந்துக்கு தயார் பண்ணுங்கள். இருவரும் இணைந்தே சமைத்து, வீட்டை விருந்துக்கு தயார் பண்ணுங்கள். யாரை அழைக்கலாம் என்று இருவரும் அமர்ந்து திட்டமிடுங்கள். அது சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் உங்கள் இருவருக்குமே பிடித்தவர்களாய் இருக்க வேண்டும்.

5. கிசுகிசுக்களை பகிர்ந்து கொள்ளுதல்

அடுத்தவர்களை பற்றி பேசுவதென்பது பெண்களின் இரத்தத்தில் கலந்த ஒன்று. இது உங்களுக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். உங்கள் கணவரிடம் இருந்து தொடங்கி உங்கள் மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடன் நெருக்கமாய் அவர்களை உணரச்செய்யுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon