Link copied!
Sign in / Sign up
25
Shares

கணவர் முதல் அப்பா வரை: நிகழும் 10 மாற்றங்கள்..!

ஒரு அம்மாவாய் நீங்கள், உடலளவிலும், மன அளவிலும் பல மாற்றங்களை சந்திக்கின்றீர்; உங்களைப்போல் உங்கள் கணவரும் இந்த மாற்றங்களையெல்லாம் ஏற்பாரா அல்லது அவருக்கு குழந்தையை வளர்ப்பில் உதவுவாரா என்றெல்லாம் பல எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். ஒவ்வொரு ஆண்மகனும் கணவன் என்ற பதவியிலிருந்து தந்தையாக பதவி உயர்வு அடையும் போது, ஆண்களில் நிகழும் மாற்றங்களைக் காணலாம்...

1. திறனின் வெளிப்பாடு..!

குழந்தை பிறந்தவுடன் வீட்டில் பல மாற்றங்கள் நிகழலாம்; அதில் முக்கியமான ஒன்று பணப்புழக்கம். குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் நல்ல நிலைக்கு வரும் வரை அவர்களை வளர்க்க. படிக்க வைக்க என எவ்வளவோ செலவுகள் ஆகலாம். இச்செலவுகள் அனைத்தையும் சமாளித்து, உங்களின் தேவை, குழந்தையின் தேவை, பெற்றோரின் தேவை என அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்பவராக உங்கள் கணவர், ஒரு பொறுப்பான அப்பாவாக, ஒரு பொறுப்பான நபராக மாறியிருப்பார்.

2. சேமிப்புத் திட்டங்கள்..

குழந்தைகளை வளர்க்க, அவர்களை படிக்க வைத்து, அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க சரியான திட்டமிட்டு வைத்திருப்பார் தந்தை. எதிர்காலத்தை கணக்கிட்டு அதற்கான சேமிப்புகளையும் உருவாக்கியிருப்பார்,உங்கள் கணவர்.

3. உங்களுக்கான புரிதல்..!

குழந்தையை சுமக்கத் தொடங்கிய கணம் முதல், பிறந்து வளர்க்கத் தொடங்கிய கணம் வரையில், ஒரு பெண்ணாய் நீங்கள் அனுபவித்த வலி, வேதனை மற்றும் நீங்கள் குழந்தைக்காக செய்யும் தியாகங்கள், உங்கள் அன்பு என அனைத்தையும் உணர்ந்து, உங்கள் மீது, ஒரு புது மரியாதையைக் கொண்டிருப்பார், உங்கள் அன்புக் கணவர்.

4. நேரம் செலவிடுதல்..

குழந்தைகள் பிறந்தது முதல், உங்கள் கணவர் வீட்டிற்கு விரைவாக வருவதுடன், வீட்டில் அதிக நேரம் செலவிடத் தொடங்குவார். குழந்தையோடு குழந்தையாக விளையாடி, மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவார்.

5. உதவிக்கரம்..!!

குழந்தைகள் பிறந்த நிமிடம் முதல், வீட்டில், உங்களுக்கான வேலைகள் பல மடங்காகியிருக்கும். உங்கள் கணவர் உங்கள் பணிச்சுமையை உணர்ந்து உங்களுக்கு உதவி செய்யத் தொடங்குவர். உங்களுக்கும் சமையலிலும், வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் உதவி செய்வார்.

6. புது நண்பர்கள்…!

குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கையில், பள்ளிக்கு அழைத்துச் செல்கையில் என உங்கள் கணவருக்கு, உங்கள் குழந்தையின் நண்பர்களின் பெற்றோர்கள் மூலம் நிறைய புது நண்பர்கள் கிடைத்திருப்பார்கள்..!

7. தந்தையின் அன்பு உணர்தல்..

உங்கள் கணவர், தந்தையான பின், ‘தன் தந்தை எப்படி அவரைப் பேணிக்காத்தார்’ என்று உணர்ந்து, தன் குழந்தையை ஒரு சிறு தீங்கும் நெருங்காது, அதிக பாதுகாப்பு உணர்வுடன், உங்கள் குழந்தையை வளர்ப்பார்.

8. நீங்கள் ஓர் அணி..!!

குழந்தை பிறப்பதற்கு முன், உங்கள் மீது எவ்வளவு தான் அன்பாக இருந்தாலும் நீங்கள் ஒரு அணியாய் வலுப்பெற்றிருக்க மாட்டீர்கள்; ஆனால், உங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், குழந்தையை வளர்க்க, நீங்கள் இணக்கமான பெற்றோராய், ஓர் அணியாய் வலுப்பெற்று, வாழ்வில் வெற்றி வாகை சூடுவீர்…!!

9. விளையாட்டுத்தோழன்..!

குழந்தைகளுடன் விளையாடுவதில், தந்தையரை மிஞ்ச எவரும் இலர். குழந்தைகளுக்குப் பல புது விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து, விளையாட்டில் குழந்தைகளை நன்கு தேர்ச்சி பெறச் செய்வார், உங்கள் கணவர். எப்பொழுதும் குழந்தைகளின் முதல் விளையாட்டுத் தோழன் அவர்களின் தந்தையே..!!

10. குழந்தைகளுடனான பேச்சுவார்த்தை..!

குழந்தைகள், தங்களுக்கென ஏதேனும் சந்தேகமோ அல்லது பயமோ தோன்றினால், அதை நிவர்த்தி செய்யும் ஒரு கதாநாயகனாகவே தங்கள் தந்தையைக் காண்கின்றனர். உங்கள் கணவரும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் கூறுவது, அவர்களின் குணங்களை மேம்படுத்துவது, அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைப்பது என அனைத்தையும், குழந்தைகளுடன் பேசி அவர்களை நல்வழியில் வழி நடத்துவார்…!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon